கோவா சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 2022: வேட்பாளர்களை அடைகாக்கும் காங்கிரஸ் - ஹோட்டலில் பாதுகாப்பு
வடக்கு கோவா ரிசார்ட்டில் இருந்து 37 வேட்பாளர்களை தெற்கு கோவாவில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது காங்கிரஸ் கட்சி
பனாஜி: கோவாவின் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை ரிசார்ட்களில் தங்க வைத்து பாதுகாத்து வருகிறது. வடக்கு கோவா ரிசார்ட்டில் இருந்து தெற்கு கோவாவில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
இதற்கிடையில், 2022 சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று மாலை வெளியானது. அதில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலா 16 இடங்களை வெல்லும் . இழுபறி நிலைமை உருவாகலாம் என்று கருத்து கணிப்புகள் வெளிவந்தன.
இதனிடையே இதர கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி சென்று சந்தித்தார்.

ஆட்சி அமைக்க தீவிரம்
கோவா சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை இல்லாத சூழலில் மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. இதுபோலவே காங்கிரஸ் கட்சியும் அங்கு ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற பிறகும் ஆட்சி அமைக்க முடியாமல் போன 2017ஆம் ஆண்டு போன்ற சூழலைத் தவிர்க்க காங்கிரஸ் நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

ரிசார்ட்டுக்கு மாற்றம்
இதன் ஒருபகுதியாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரையும் பாதுகாக்கும் பொருட்டு அவர்கள் அனைவரும் வடக்கு கோவாவில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டனர்.

ஹோட்டலுக்கு மாற்றம்
இதனிடையே வடக்கு கோவா ரிசார்ட்டில் இருந்து 37 வேட்பாளர்களை தெற்கு கோவாவில் உள்ள ஹோட்டலுக்கு காங்கிரஸ் கட்சி அழைத்துச்சென்று பாதுகாப்பாக தங்க வைத்துள்ளது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு அனைவரும் கட்சி மாறாமல் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து வேட்பாளர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கட்சிகள் முடிவு செய்துள்ளன.

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியும் தனது வேட்பாளர்களை பாதுகாப்பாக வெவ்வேறு இடங்களில் தங்க வைத்துள்ளது. கோவாவில் ஆம் ஆத்மி பெரிய அளவில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றாலும் கூட ஒரு சில எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றாலும் அவர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவும் காங்கிரசும் முயற்சி மேற்கொண்டுள்ளன. இதனால் தங்கள் வேட்பாளர்களை பாதுகாப்பாக வைக்கும் நடவடிக்கையை ஆம் ஆத்மி எடுத்துள்ளது.

கட்சித்தாவல்
கோவாவில் கட்சி தாவலால் பெரிதும் பாதிக்கப்பட்டது, காங்கிரஸ் கட்சிதான். கடந்த 2017ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 17 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தது. ஆனால், 5 ஆண்டுகளில் 15 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியநிலையில், தற்போது 2 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர்.
Recommended Video

சத்தியம் வாங்கிய தலைமை
இந்த முறையும் கட்சித்தாவல் நடைபெறாமல் தடுக்க தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களிடம் கோவில், தர்கா, தேவாலயத்தில் சத்தியம் பெறப்பட்டுள்ளது. ‘‘வெற்றி பெற்றால் கட்சி தாவ மாட்டோம்'' என்று வேட்பாளர்கள் சத்தியம் செய்துள்ளனர். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அனைத்து வேட்பாளர்களையும் அடைகாத்து வருகிறது காங்கிரஸ் கட்சி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications