திண்டுக்கல் மாநகராட்சி வார்டில் "மலர்ந்த" தாமரை.. முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக!
திண்டுக்கல் மாநகராட்சியில் 1 வார்டில் பாஜக வெற்றி பெற்று தனது வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளது.
திண்டுக்கல்: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட பாஜக திண்டுக்கல் மாநகராட்சியில் தனது வெற்றிக்கணக்கை பாஜக பதிவு செய்துள்ளது. 1வது வார்ட்டில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் மொத்தம் 12,820 வார்டுகள் உள்ளன. ஏற்கெனவே 218 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள வார்டு உறுப்பினர் பதவிகளை பிடிக்க 57,746 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது. கொரனா பரவல் காலம் என்பதால் அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அதிமுக, திமுக, பாஜக, மநீம, நாம் தமிழர் கட்சி,அமமுக, பாமக என அரசியல் கட்சிகள் தங்களின் பலத்தை நிரூபிக்க களமிறங்கியதால் பலமுனைப் போட்டி நிலவியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகள் உள்ளன. திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டு கவுன்சிலர்கள் பதவிகளுக்கு மொத்தம் 275 பேர் போட்டியிட்டுள்ளனர்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட பாஜக திண்டுக்கல் மாநகராட்சியில் தனது வெற்றிக்கணக்கை பாஜக பதிவு செய்துள்ளது. 1வது வார்ட்டில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
திண்டுக்கல் மட்டுமல்லாது, நெல்லையிலும் நாகர்கோவிலிலும் பாஜக தனது வெற்றிக்கணக்கை பதிவு செய்துள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications