"கிச்சான்னாலே இளிச்சவாயன்தானே.." அது சரி.. யாரு இந்த கிச்சா? ஏன் இத்தனை மீம்ஸ் சுற்றி வருகிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கிச்சான்னாலே இளிச்சவாயன்தானே.." இந்த ஒற்றை வார்த்தை இன்று தமிழ் பேசும் நல்லுலகின் சமூக இணையவெளிகளை நிரப்பிக் கொண்டு இருக்கிறது.

தாடி வச்சி, சற்று ஏக்கத்தோடு பேசும் ஒரு 50 வயதை கடந்த நபரின் படத்தோடு இந்த வரிகள் மீம்களாக உலவி வருகின்றன. தன்னைத்தானே சுய பச்சாதாபமாக சித்தரிப்பதற்கும், வேறு யாரையாவது அப்படி பரிதாபத்தோடு குறிப்பிடவும், இந்த மீமை போட்டு கடந்து போகிறது நெட்டிசன் கூட்டம். அந்த வகையில், இதுவும் செல்போனின் அங்கமான எமோஜியைப் போல மாறிவிட்டது.

யாருப்பா இந்த கிச்சா

யாருப்பா இந்த கிச்சா

"யார் இந்த கிச்சா.. இவர் ஏன் இளிச்சவாயன் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்கிறார் .."என்ற கேள்வி.. "புள்ளி ராஜாவிற்கு எய்ட்ஸ் வருமா" என்ற இரு தசாப்தங்களுக்கு முந்தைய டிவி விளம்பரம் போல வைரலாகிவிட்டது. சரி யார்தான் அந்த கிச்சா என்கிறீர்களா. அது இருக்கட்டும், அதற்கு முன்பு இந்த மீமில் இடம் பெற்ற கிச்சா முகத்தை பார்த்தீர்களா. அவர் பெயர் நடிகர் ரவி. அப்பாவி முகத்துக்கென்றே அளவெடுத்து செய்ததை போன்ற ஒரு முகம். பார்ப்பதற்கு மின்னல் முரளி படத்தால் சமீபத்தில் புகழ் பெற்ற குரு சோமசுந்தரம் போன்ற சாயல்.

மின்னல் முரளி பார்த்தாச்சா

மின்னல் முரளி பார்த்தாச்சா

மின்னல் முரளி படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும்.. குரு சோமசுந்தரம் கதாப்பாத்திரம் எப்படி ஒரு சைலன்ட் கில்லராக வடிவமைக்கப்பட்டது என்பது. "இப்படி ஒரு அரக்கனா.." என்று பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்த நடிப்பு அது. அப்படித்தான், ரவியும் தனது கதாப்பாத்திரத்தில் 'வாழ்ந்திருந்தார்.'

அடேங்கப்பா ரவுசு

அடேங்கப்பா ரவுசு

ஓடிடி தளத்தில் வெளியான "விலங்கு" என்ற வெப்சீரிசில், ரவி கேரக்டர் பெயர் "கிச்சா." அந்த சீரிசில் கிச்சா செய்யும் ஊமை குசும்புகள், சல்லாப சரச லொல்லுகள் கொஞ்சமா நஞ்சமா..? "ஒரு கொலையா, இரண்டா, அதுவுமில்லை.. 8 கொலையாம்.." என்று கேட்டு கலங்கி, போலீஸ் உயர் அதிகாரியே வியர்த்து ஊத்தி தொப்பென கீழே உட்காரும் அளவுக்கு டெரர் காட்டியவர்தான் திருவாளர் கிச்சா.

கிச்சான்னாலே இளிச்சவாயன்தானே

கிச்சான்னாலே இளிச்சவாயன்தானே

பண்றதெல்லாம் பண்ணதை கூட ரசிகர்கள் மன்னிச்சிட்டாங்க.. அட மறந்துட்டாங்கன்னே வச்சுப்போம். ஆனா, எல்லாத்தையும் சப் இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லிட்டு.. "கிச்சான்னாலே இளிச்சவாயன்தானே" அப்படின்னு கிச்சா சொன்னதும், "ஓங்கி இவர் கன்னத்தில் ஒன்னு வச்சா என்ன.." என்று ரசிகர்களின் கைகளே துடிக்கும்னா பார்த்துக்கொள்ளுங்கள்.

அப்பாவியில்லை.. அடப்பாவி

அப்பாவியில்லை.. அடப்பாவி

ஆக மொத்தம்.. அப்பாவிகளுக்கு மட்டுமல்ல.. அப்பாவி மாதிரி காட்டிக் கொண்டு அசாத்தியமான விஷயங்களை செய்யும் கேடி பசங்களை குறிக்கவும் கிச்சா மீம்ஸ் இப்போ யூஸ் ஆகுது. இதனால்தான் கிச்சா எல்லா சிட்டுவேசனுக்கும் பொருந்திப்போகும் ஆள் என்று ஷேர் செய்து குதுகலிக்கின்றனர் நெட்டிசன்கள். சந்தேகமிருந்தால் ஒருமுறை விலக்கு சீரிசை பாருங்கள். கிச்சாவுக்கு ஏன் விளக்கவுரை எழுதினோம்னு அப்போ தெரியும் பாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+