சைக்காலஜி அட்டாக்.. கோலி, ரோஹித் வந்தது பாகிஸ்தான் கீப்பர் நடந்து கொண்ட விதம்! சர்ச்சை.. என்ன ஆச்சு?
துபாய்: நேற்று இந்திய அணிக்கு எதிரான ஆசிய கோப்பை 2022 போட்டியில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் நடந்து கொண்ட விதம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
நேற்று இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. டாசில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து இறங்கிய பாபர் அசாம் 9 பந்தில் வெறும் 10 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஃபகார் சமானும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
147 ரன்கள் எடுத்த நிலையில் 19.5 ஓவரில் பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ரிஸ்வான் மட்டும் 43 ரன்கள் எடுத்தார்.
இதன்பின் இறங்கிய இந்திய அணியில் கோலி 35, ஜடேஜா 35, ஹர்திக் பாண்டியா 33 என்று அதிரடியாக ரன்களை குவிக்க.. இந்திய அணி 19.4 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.

கோஷம்
நேற்று போட்டியில் ரசிகர்கள் அதிக அளவில் இருந்தனர். இவர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் பந்து பேட்டில் படும் சத்தம் கூட கேட்காமல் இருந்தது. உதாரணமாக ஃபகார் சமான் பேட்டில் பந்து பட்டு அதை தினேஷ் கார்த்திக் பிடித்த போது அந்த சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. ஏன் தினேஷ் கார்த்திக்கு கூட கேட்கவில்லை. இதனால் அவர் விக்கெட் கேட்காமல் அமைதியாக இருந்தார். பேட்ஸ்மேன்தான் நேர்மையாக அவுட் என்று பெவிலியன் சென்றார்.

தினேஷ் கார்த்திக்
அந்த அளவிற்கு கடுமையான சத்தம் நேற்று மைதானத்தில் நிலவியது. பந்து பேட்டில் பட்டால் கூட கேட்காத அளவிற்கே சூழ்நிலை நிலவியது. ஆனால் இப்படி இருந்தும் கூட நேற்று பாகிஸ்தான் கீப்பர் ரிஸ்வான் தொடர்ந்து விக்கெட்டுகளை கேட்டு டென்சன் ஆக்கினார். முதலில் ரோஹித் சர்மா பேட்டிங் செய்த போது பந்து பேட்டில் படவில்லை என்றாலும் பட்டது போலவே விக்கெட் கேட்டு கோஷம் எழுப்பினார். அதன்பின் கோலி வந்ததும் இதை போலவே செய்தார்.

ரிஸ்வான்
கோலி வந்ததும் இரண்டு பாலுக்கு ஒரு முறை பந்து பேட்டில் படவில்லை என்றாலும் விக்கெட் கேட்டார். பொதுவாக இது போன்ற விஷயங்களை சைக்காலஜி அட்டாக் என்பார்கள். அடுத்தடுத்து விக்கெட் கேட்டுக்கொண்டே இருந்து எதிரணி வீரருக்கு ஒரு வித பிரஷரை உருவாக்குவது. எங்கே நாம் அவுட்டாகி விடுவோமோ என்ற பிரஷரை உருவாக்குவது. இதை நேற்று ரிஸ்வான் தொடர்ந்து செய்தார்.

கோலி பேட்டிங்
தனது கைக்கு எந்த பந்து வந்தாலும் உடனே அதை பிடித்து அவுட்டா என்று கேட்டார். இது ஒரு விதத்தில் இந்திய ஓப்பனர்களுக்கு கொஞ்சம் பிரஷர் கொடுத்தது உண்மைதான். தொடக்கத்தில் இந்திய வீரர்கள் கொஞ்சம் நம்பிக்கை குறைவாக ஆடினார்கள். ரிஸ்வான் நேற்று செயல்பட்ட விதம் குழந்தைத்தனமாக இருந்தது. இதை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
டெலிவரி வேலை மூலம் தினசரி வருமானம், வாராந்திர இன்சென்டிவுடன் 30,000 வரை சம்பாதியுங்கள்
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications