• search
துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கேகேஆர் அல்லது டெல்லி.. எந்த டீம் பைனலுக்கு வந்தால் சிஎஸ்கே ஈஸியாக வெல்லலாம்? இவ்வளவு விஷயம் இருக்கே

Google Oneindia Tamil News

துபாய்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நாளை குவாலிபையர் 2 ரவுண்ட் போட்டி நடைபெற உள்ளது. இதில் எந்த அணி வெல்கிறதோ அது, வரும் வெள்ளிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், மோத வேண்டியிருக்கும்.

இவ்விரு அணிகளில் எந்த அணி பைனலில் சிஎஸ்கேவுடன் மோதுவது சிஎஸ்கே அணிக்கு சாதகமாக இருக்கும் என்பது குறித்த விவாதங்கள் ஆரம்பித்து விட்டன.

இதுகுறித்து கிரிக்கெட் பண்டிதர்களும், முன்னாள் வீரர்களும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் கருத்தின் சாராம்சம் இதுதான்.

பணம் இல்லை, நகை இல்லை.. வீட்டுக்கு எதுக்கு பூட்டு கலெக்டரே?.. அரசு லெட்டர் பேடில் கடிதம் எழுதிய திருடன்பணம் இல்லை, நகை இல்லை.. வீட்டுக்கு எதுக்கு பூட்டு கலெக்டரே?.. அரசு லெட்டர் பேடில் கடிதம் எழுதிய திருடன்

கேகேஆர் வெளியே போயிருக்கனும்

கேகேஆர் வெளியே போயிருக்கனும்

நடப்பு ஐபிஎல் சீசனை பொறுத்தளவில், பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோமா என்று தெரியாமல், கடைசி நேரத்தில் உள்ளே வந்த அணி மோர்கன் தலைமையிலான கேகேஆர். மும்பை அணி ஒருவேளை, தனது கடைசி லீக் போட்டியில் அதிக ரன் ரேட்டில் ஜெயித்திருந்தால், கேகேஆர் அப்படியே வெளியே போயிருக்க வேண்டிய டீம். ஆனால் அரபு எமிரேட்ஸ் வந்த பிறகு கேகேஆர் சிறப்பாக ஆடத் தொடங்கியது. மேலும், மும்பை அணியால் உள்ளே வர முடியாத நிலையில் அடுத்த ரவுண்டில் கேகேஆர் காலடி எடுத்து வைத்தது.

கேகேஆர் வீரர்கள் நம்பிக்கை

கேகேஆர் வீரர்கள் நம்பிக்கை

அதிருஷ்டம் நம்ம பக்கம் இருக்கிறது என கேகேஆர் வீரர்கள் நம்ப தொடங்கிவிட்டனர். பவர்பிளேயில் சிறப்பாக ஆடும் அணியில் முதலிடத்தில் இப்போது கேகேஆர்தான் இருக்கிறது. நேற்றைய ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்துள்ளனர். இவையெல்லாம் அந்த அணி வீரர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தியிருக்கும்.

  Shardul Thakur முன்கூட்டியே வந்தது ஏன்? Dhoni சொன்ன காரணம்
  அடுத்தடுத்து தோற்ற டெல்லி கேபிடல்ஸ்

  அடுத்தடுத்து தோற்ற டெல்லி கேபிடல்ஸ்

  டெல்லி அப்படியில்லை. அவர்கள் ஆர்சிபியிடம் கடைசி பந்தில் தோற்றனர். சிஎஸ்கேவிடம் கடைசி ஓவரில் தோற்றனர். தோனி 3 பவுண்டரி விளாசி சிஎஸ்கேவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதுபோன்ற க்ளோஸ் கேம்களில் தோற்பது எந்த ஒரு அணிக்கும் மனதளவில் பின்னடைவை ஏற்படுத்திவிடும். ஆவேஸ் கான் பந்து வீச்சில் கூட அது எதிரொலித்தது. சீசன் முழுக்க நன்கு வீசிய அவர், ஆர்சிபி கடைசி பந்தில் தனது பாலில் சிக்சர் அடித்தது முதல் இடிந்து போய் விட்டார். சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் அவர் பந்து வீச்சு சிறப்பாக இல்லை. கடைசி நேரத்தில் தோனி அவரது பந்தில்தான் சிக்சர் விளாசி ஆவேஸ்கான் நம்பிக்கையை மேலும் குறைத்து விட்டார். ரபடாவும் பார்மில் இல்லை.

  கொல்கத்தா சுழற்பந்து வீச்சாளர்கள்

  கொல்கத்தா சுழற்பந்து வீச்சாளர்கள்

  கொல்கத்தாவில் பெர்குசன் சிறப்பாக பந்து வீசி வருகிறார். வருண் சக்கரவர்த்தி மற்றும் நரேனை எதிர்கொண்டு மிடில் ஓவர்களில் ரன் சேர்ப்பது பெரிய கஷ்டமாக உள்ளது. அதுபோன்ற மிஸ்ட்ரி ஸ்பின்னர்கள் டெல்லி அணியில் இல்லை. ஏற்கனவே டெல்லி அணியை சிஎஸ்கே தோற்கடித்து உள்ளது. எனவே பைனலில் வரும்போதும் சிஎஸ்கேவிற்கு அதுதான் நம்பிக்கையளிக்கும். கேகேஆர் வந்தால் சிஎஸ்கே வெற்றிக்காக கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.

   பைனலில் சிஎஸ்கே கேகேஆர் மோதிய வரலாறு

  பைனலில் சிஎஸ்கே கேகேஆர் மோதிய வரலாறு

  மேலும், டெல்லி அணி இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையையும் வெல்லவில்லை. ஆனால் 2012ம் ஆண்டு சிஎஸ்கேவும் கொல்கத்தாவும்தான் இறுதி போட்டியில் சந்தித்தன. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 190 ரன்களை குவித்தது. ஆனால், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த ஸ்கோரை வென்று காட்டி சாம்பியன் ஆனது கொல்கத்தா. 2012ம் ஆண்டு பைனல் மீண்டும் நினைவுக்கு வரும் என்பதால் அது கேகேஆருக்கு சாதகமாகிவிடும். முதல் முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் டெல்லி களமிறங்கும்போது பதற்றத்தில் நிறைய தவறுகள் செய்யும் வாய்ப்பு உண்டு. ஆனால் கேகேஆருக்கு அதுபோன்ற பிரச்சினைகள் இல்லை. எனவே, நாளைய போட்டியில் டெல்லி வென்றால் அது சென்னை அணிக்கு மகிழ்ச்சி செய்தி என்கிறார்கள், கிரிக்கெட் சார்ந்த நிபுணர்கள்.

  English summary
  The Qualifier 2 round match between Kolkata Knight Riders and Delhi Capitals is scheduled for tomorrow. Whichever team wins will have to face the Chennai Super Kings on Friday. Which team is easy for CSK to defeat in the final?
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X