துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அசைக்க முடியாத அணியாக உருவெடுத்த பாகிஸ்தான்...2 ஆண்டுகளுக்கு முன் தடுமாறிய அணி... மீண்டது எப்படி?

Google Oneindia Tamil News

துபாய்: 2021 டி 20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் செமி பைனலுக்கு சென்றுள்ளது. இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் போன்ற வலுவான அணிகளை வீழ்த்திவிட்டு இந்தியா செமி பைனல் சென்றுள்ளது.

2 வருடம் முன்பு வரை பாகிஸ்தான் அணி சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வளவு சிறப்பான அணியாக இல்லை. 2019ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் கூட சர்ப்ராஸ் அகமது தலைமையில் ஆடிய அணி மிக மோசமாக சொதப்பி அந்த தொடரில் ஏமாற்றம் அளித்தது.

சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த வீரரும் சரியாக ஆடவில்லை. ஏன் அணியின் கேப்டனை சொந்த வீரர்களே கிண்டல் செய்யும் அளவிற்கு அணி நிலைமை மிக மோசமாக இருந்தது.

ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் க்ளீன் ஸ்வீப்! டெபாசிட்டை இழந்து தோற்ற பாஜக! பின்னணியில் 5 காரணங்கள்ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் க்ளீன் ஸ்வீப்! டெபாசிட்டை இழந்து தோற்ற பாஜக! பின்னணியில் 5 காரணங்கள்

மோசமான அணி

மோசமான அணி

ஒரு பக்கம் பெரிய அணிகள் பாகிஸ்தானோடு சர்வதேச தொடர்களில் ஆட மறுத்தது. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் அணிக்கு உள்ளேயே நிறைய குழப்பங்கள் நிலவி வந்தது. ஏன் அணியின் அப்போதைய கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பான வீரர் கிடையாது. அப்படி மோசமான நிலையில் இருந்த ஒரு அணிதான் தற்போது டி 20 உலகக் கோப்பையில் மற்ற அணிகளை கதி கலங்க வைத்துக்கொண்டு இருக்கிறது.

மாற்றினார்

மாற்றினார்

ஜாம்பவான் அணிகள் என்று கருதப்பட்ட இந்தியா, நியூசிலாந்து போன்ற அணிகளை எல்லாம் அடித்து துவைத்துவிட்டு பாகிஸ்தான் அணி முதல் ஆளாக செமி பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. வெறும் 2 வருடத்தில் பாகிஸ்தான் அணி இவ்வளவு பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 15 வருடங்களாகவே பாகிஸ்தான் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டப்பட்டு வந்தது. முதலில் இந்தியாவுடன் நேருக்கு நேர் மோத முடியாத காரணத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் வருமானம் குறைந்தது. தொடர்ச்சியாக பல அவமானங்களை சந்தித்த இந்த அணி புதிய உத்வேகம் பெற்றுள்ளது

ஒரு வீரர் - ஒரு கோச்

ஒரு வீரர் - ஒரு கோச்

பாகிஸ்தான் அணி 2 வருடத்தில் புதிய உயரம் தொட 3 பேர்தான் முக்கிய காரணம். ஒருவர் அணியின் புதிய கேப்டன் பாபர் ஆஸம். இந்திய அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் கோலிதான் என்று சொல்லப்படுவது போலத்தான்.. பாகிஸ்தானில் இருக்கும் ஒவ்வொரு வீரரையும் தன்னை போல உலக தரத்திற்கு உயர்த்தியவர் பாபர் ஆஸம். ஒரு வீரர் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டால் அந்த அணி எப்படி முன்னேற்றம் அடையும் என்பதற்கு பாபர் ஆஸம் - பாகிஸ்தான்தான் சிறந்த உதாரணம்.

Recommended Video

    Pakistan Team Visits Namibias Dressing Room to Congratulate | #SpiritofCricket | OneIndia Tamil
     சர்வதேச போட்டிகளில் கவனம்

    சர்வதேச போட்டிகளில் கவனம்

    வங்கதேச வீரர்கள் போல குழந்தைதனமாக இருந்த வீரர்களை பக்குவப்படுத்தி மேம்படுத்தியது பாபர் ஆஸம்தான். இன்னொரு பக்கம் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக். தொடர்ச்சியாக வெளிநாட்டு பயிற்சியாளர்களை வைத்து சோதனை முயற்சி செய்து தோல்வி அடைந்த பாகிஸ்தான்.. இந்தியாவை போல தனது முன்னாள் வீரர் மிஸ்பாவை பயிற்சியாளராக கொண்டு வந்தது. இவரும் பவுலிங் பயிற்சியாளர் வாக்கர் யூனிசும் இணைந்துதான் அணியை மொத்தமாக மாற்றினார்கள்.

    சிறப்பு

    சிறப்பு

    இந்த பயிற்சியாளர் குழுதான் மூத்த வீரர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு பாபர் தலைமையில் பல புதிய ஸ்டார்களை கொண்டு வந்தது. ரிஸ்வான், பக்கர் சாமான், ஷாகீன் போன்ற பல வீரர்கள் அணிக்குள் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர்ந்து மெருகேற்றப்பட்டனர். கடந்த 2 வருடமாக செய்யப்பட்ட கடின உழைப்புகள், மாற்றங்களை அந்த அணி அறுவடை செய்து கொண்டு இருக்கிறது.

    ஆனால் இந்தியா

    ஆனால் இந்தியா

    ஒரு பக்கம் பாகிஸ்தான் அதிரடியாக முன்னேறி வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்தியா அதீத நம்பிக்கை காரணமாக பின்னடைவை சந்தித்துள்ளது. இந்திய அணியிலும் சிறப்பான வீரர்கள் படை இருக்கிறது. ஆனால் போதிய சர்வதேச போட்டிகளில் ஆடாமல் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்தியது. பாகிஸ்தானோடு ஆட மறுத்தது. பயிற்சியாளர்கள், கோலி போன்றவர்களுக்கு அதிகமாக ஃபிரீ ஹேண்ட் கொடுத்தது.

    ஐபிஎல்

    ஐபிஎல்

    வீரர்களுக்கு சரியாக ஓய்வு கொடுக்காமல் வருமானம் மீது கவனம் செலுத்தியது என்று பிசிசிஐ நிறைய தவறுகளை செய்தது. இந்திய அணி நன்றாக ஆடுகிறது என்றே ஒரே காரணத்தால் வரும் முழுக்க பிஸியாக அடுத்தடுத்து தொடர்களை நடத்தியது. ரொட்டேஷன் பாலிசியை கடைபிடிக்காமல் டி 20, ஒருநாள் அணிக்கு கிட்டத்தட்ட ஒரே அணியை பயன்படுத்தியது என்று நிறைய தவறுகளை செய்தது.

    ஆணவம்

    ஆணவம்

    ஐபிஎல்லில் நன்றாக ஆடிய ஒரே காரணத்திற்காக சூரிய குமார் யாதவ், இஷான், வருண் போன்றவர்களை தூக்கி வைத்து கொண்டாடி அவர்களுக்கு அதிக பிரஷர் கொடுத்தது என்று இந்திய கிரிக்கெட் உலகம் நிறைய தவறுகளை கடந்த 2 வருடங்களில் செய்துள்ளது. இந்தியாவிலும் பல திறமையான வீரர்கள் உள்ளனர். இந்திய அணி இப்போது செய்ய வேண்டியது எல்லாம் சின்ன கோர்ஸ் கரெக்சன்தான்.

    பாகிஸ்தான் மெருகேற்றியது

    பாகிஸ்தான் மெருகேற்றியது

    பாகிஸ்தான் செய்தது போல சில சின்ன மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. புதிய கேப்டனாக ரோஹித் சர்மா அல்லது கே எல் ராகுல் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன்பின் இந்திய அணிக்குள் ஆக்கபூர்வமான மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    How did Pakistan become a top team and rule the T20 world cup 2021 in a very short span of time?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X