அடேங்கப்பா.. மனைவியின் பிறந்தநாளுக்கு தொழில் அதிபர் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்டை பாருங்க..வைரல் வீடியோ

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஒவ்வொரு மனிதருக்கும் அவரது பிறந்தநாள் என்பது மிகவும் சிறப்புக்குரிய நாளாகும். இந்த பிறந்த நாளில் அன்புக்குரியவர்கள் கொடுக்கும் பரிசுகள் பிறந்தநாளை மேலும் சிறப்புமிக்கதாக மாற்றுகிறது. பொதுவாக பிறந்தநாள் பரிசை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது.

அன்புக்குரியவர்கள் கொடுக்கும் பரிசுகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும், விலை உயர்ந்ததாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், பரிசுகள் எப்போதுமே சிறப்புடையவைதான்.

தொழில் அதிபர்

தொழில் அதிபர்

இந்த மகிமையை உணர்ந்த இந்த தொழில் அதிபர், தனது மனைவிக்கு ரோல்ஸ் ராயல்ஸ் காரை பரிசளித்து அவரை ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த செய்தி பற்றி விரிவாக காண்போம். கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்ஜத் சித்தாரா(30(. இவரது மனைவி மர்ஜானா அம்ஜத்(22). தொழில் அதிபரான அம்ஜத் சித்தாரா துபாயில் பிசிசி குழு என்ற ஒப்பந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். மர்ஜானா தனது கணவரின் நிறுவனத்தில் தலைமை இயக்க அதிகாரியாக பணிபுரிகிறார்.

இரட்டிப்பு மகிழ்ச்சி

இரட்டிப்பு மகிழ்ச்சி

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் கடந்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு சமீபத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே கடந்த 2-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார் மர்ஜானா அம்ஜத். ஏற்கனவே மகள் வேறு பிறந்து விட்டதாலும், மனைவியின் பிறந்தநாள் என்பதாலும் தொழில் அதிபர் அம்ஜத் சித்தாரா இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்தார்.

ரோல்ஸ் ராயல்ஸ் கார்

ரோல்ஸ் ராயல்ஸ் கார்

புதியதாக பிறந்த மகளுக்கும், மனைவிக்கும் பிறந்தநாள் பரிசு அளிக்க திட்டமிட்டார். இதனை தொடர்ந்து ரூ.3 கோடி மதிப்பிலான பளபளப்பான புதிய சிவப்பு ரோல்ஸ் ராயல்ஸ் காரை பரிசளித்து அசத்தினார். இந்த காரை அவர் பரிசளித்த விதம் தான் மிகவும் சிறப்பாக இருந்தது. அதாவது குழந்தையுடன் மனைவியை கார் ஷோரூமுக்கு அழைத்து சென்ற அம்ஜத் சித்தாரா அங்கு பிரமாண்டமான பரிசு பெட்டியை திறந்து அதற்குள் நிறுத்தப்பட்ட காரை மனைவிக்கு பரிசளித்து அசத்தினார்.

திக்குமுக்காடி போனார்

திக்குமுக்காடி போனார்

கணவரின் சர்ப்ரைஸ் கிப்ட்டை பார்த்தும், சில நிமிடங்கள் ஏதும் பேச வார்த்தையில்லாமல் மர்ஜானா அம்ஜத் உற்சாகத்தில் திக்குமுக்காடி போனார். இது குறித்து மர்ஜானா அம்ஜத் கூறுகையில், ' கணவர் இந்த காரை எனக்கு பரிசளிக்க திட்டமிட்டுள்ளார் என்று எனக்கு தெரியாது. இது ஒரு பெரிய ஆச்சரியமாக இருந்தது. அவர் என் மகளையும் என்னையும் ஷோரூமுக்கு அழைத்துச் சென்றார், அந்த இடம் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டது. மிகவும் உற்சாகமாக இருந்தேன். இது எனது கனவு கார், அதை பரிசாக பெறுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை' என்று கூறியுள்ளார். முன்னதாக இந்த அற்புதமான நிகழ்வை அம்ஜத் சித்தாரா சமூக வலைத்தளங்களில் வெளியிட, இது தற்போது வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+