Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சவுதிக்கு வார்னிங்! மருந்து மூல பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகளிலிருந்து வெளியேறுங்கள் - ஈரான்

Subscribe to Oneindia Tamil

துபாய்: இன்று காலை ஈரானின் மிக முக்கியமான இயற்கை எரிவாயு வயலான, தெற்கு பார்ஸ் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி கொடுக்க, ஈரானும் தாக்குதலை மேற்கொள்ள உள்ளது. எனவே முன்னெச்சரிக்கையாக சவுதி மற்றும் கத்தாருக்கு வார்னிங் கொடுத்திருக்கிறது.

சவுதி மற்றும் கத்தாரில், உள்ள பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களிலிருந்து உடனடியாக பணியாளர்களும், பொதுமக்களும் வெளியேற வேண்டும் என்று ஈரான் அறிவுறுத்தியிருக்கிறது. மருந்து நிறுவனங்கள், மருந்துகளைத் தயாரிப்பதற்குத் தேவையான சில அடிப்படை வேதிப்பொருட்களை, பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களிடமிருந்துதான் வாங்குகின்றன.

Iran

ஈரான் மீது தாக்குதல்

இன்று காலை ஈரான் மீது பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் தெற்கு பகுதியில் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயல் அமைந்திருக்கிறது. இந்த வயல் ஈரானுக்கு ரொம்ப முக்கியம். இது ஈரானுக்கு முதுகெலும்பை போன்றதாகும். இந்த பகுதியில் ஈரானின் மொத்த எரிவாயு இருப்பில் 50% இருக்கிறது. இப்படியான பகுதியில்தான் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல் ஈரானை சீண்டியிருக்கிறது.

ஈரான் கொடுத்த வார்னிங்

இந்த தாக்குதலில், ஈரானின் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் காதிப் நேற்றிரவு நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியும் கொல்லப்பட்டுள்ளார். எனவே டென்ஷனான ஈரான் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறது. இதனால் சவுதி அரேபியா மற்றும் கத்தாருக்கு வார்னிங் கொடுத்திருக்கிறது. இங்குள்ள பெரிய எண்ணெய் வயல்களை தாக்க திட்டமிட்டிருக்கிறது.

எந்த பகுதியில் தாக்குதல்?

சவூதி அரேபியா: சாம்ரெஃப் (SAMREF) சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஜுபைல் (Jubail) பெட்ரோகெமிக்கல் வளாகம்.
ஐக்கிய அரபு அமீரகம் (UAE): அல் ஹொஸ்ன் (Al Hosn) எரிவாயு வயல்.
கத்தார்: மெசைத் (Mesaieed) பெட்ரோகெமிக்கல் வளாகம் மற்றும் ராஸ் லஃப்பான் (Ras Laffan) சுத்திகரிப்பு நிலையம்.

இந்த பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் மீதுதான் தாக்குதல் நடத்தப்போவதாகவும், எனவே இங்கு இருக்கும் பணியாளர்கள், இதன் அருகில் இருக்கும் பொதுமக்கள் உடனே பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. இந்த நிறுவனங்களிடமிருந்துதான், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மூல வேதிப்பொருட்களை வாங்குகின்றன.

தயார் நிலையில் ஐக்கிய அரபு அமீரகம்

இந்த எச்சரிக்கைக்கு கத்தார் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஈரானின் தாக்குதல் வெறுமென வளைகுடா நாடுகளின் தாக்குதல் என்று புரிந்துக்கொள்ள கூடாது. மாறாக, சர்வதேச எரிசக்தி பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஈரானின் அச்சுறுத்தல் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம் தனது பாதுகாப்பு அமைப்பை தயார் நிலையில் வைத்திருக்கிறது.

இஸ்ரேலை விட்டுவிட்டு, சவுதியை தாக்குவது ஏன்?

இந்த பிரச்சனையில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், ஈரானை தாக்கியது இஸ்ரேலும், அமெரிக்காவும்தான். ஆனால், பதிலுக்கு அந்த நாடுகளை தாக்காமல், சவுதி மற்றும் கத்தாரை அட்டாக் செய்ய ஈரான் ரெடியாகி வருகிறது. ஈரான் ஏன் இப்படி செய்கிறது? என்பதற்கு பின்னால் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், ஈரானை தாக்க சவுதியும், கத்தாரும் இடம் கொடுத்தது என்பதுதான். எங்களை தாக்க இடம் கொடுத்தால், நீங்களும் எங்கள் எதிரியே என சொல்லி, ஈரான் தாக்குதல் நடத்துகிறது.

அதேபோல, நேரடியாக அமெரிக்காவை தாக்குவதை விட, வளைகுடா நாடுகளின் எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல் நடத்துவது, அமெரிக்காவுக்கு நெருக்கடியை அதிகரிக்கும். எனவேதான் ஈரான் இந்த முடிவை கையில் எடுத்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+