துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அம்மாடி.. விண்கல் மோதி உருவான 555 காரட் "கருப்பு" வைரம்! உலகிலேயே பெரியது! விலை என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

துபாய்: உலகிலேயே மிகப் பெரிய 555.55 காரட் கருப்பு நிற வைரமானது தற்போது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகவும் கடினமான பொருளாக வைரம் கருதப்படுகிறது. இதனால் தான் பாறை போன்ற கடினமா பொருட்களை வெட்டும் பணிகளில் வைரம் பதித்த ரம்பங்கள் பயன்படுத்தப்படும்.

சிறு வைரக்கற்களே பல கோடி வரை விற்பனை ஆகும் நிலையில், உலகின் மிகப் பெரிய வைரம் தற்போது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமைகளில் பூஸ்டர் தடுப்பூசி ...தமிழகம் முழுவதும் 600 இடங்களில் நடைபெறும் - மா.சுப்ரமணியன் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் தடுப்பூசி ...தமிழகம் முழுவதும் 600 இடங்களில் நடைபெறும் - மா.சுப்ரமணியன்

 தி எனிக்மா

தி எனிக்மா

இந்நிலையில், உலகிலேயே மிகப் பெரிய வெட்டப்பட்ட வைரமாகக் கருதப்படும் கருப்பு நிற வைரம் ஒன்று ஐக்கிய அமீரகத்தில் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த 555 காரட் கருப்பு நிற வைரத்தை "தி எனிக்மா" என்று ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். இந்த வைரம் தற்போது மக்கள் பார்வைக்காகத் துபாயில் வைக்கப்பட்டுள்ளது.

 என்ன விலை

என்ன விலை

இந்த அரிய கருப்பு நிற வைரம் விரைவில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த வைரம் சுமார் 5 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 37.26 கோடி ரூபாய்க்கு விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வைரம் இதுவரை யாரிடம் இருந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. சுமார் 20 ஆண்டுகளில் இந்த வைரம் இப்போது தான் முதல்முறையாக மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 எப்படி உருவானது

எப்படி உருவானது

சுமார் 2.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் அல்லது ஆஸ்டிராய்டு எனப்படும் சிறுகோள் பூமியில் மோதிய போது இந்த வைரம் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. சில நாட்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட பின்னர், இந்த வைரம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லண்டனுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கும் சில நாட்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட பின்னர் பிப். 3ஆம் தேதி இந்த வைரம் ஆன்லைம் மூலம் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 அரிய கருப்பு நிற வைரம்

அரிய கருப்பு நிற வைரம்

இது குறித்து இந்த வைரத்தை ஏலமிடும் சோதேபி ஸ்டீபன் கூறுகையில், "இவ்வளவு பெரிய ஒரு கருப்பு நிற வைரம் மிக அரிதான ஒன்று. இது எப்படி உருவாகியிருக்கும் என்பது மர்மமாகவே உள்ளது. பூமியில் சிறுகோள் மோதியதில் இந்த கருப்பு நிற வைரம் உருவாகியிருக்கும் என்றே நான் கருதுகிறேன். இதை ஒரு காஸ்மிக் வொண்டர் என்று கூட நாம் சொல்லலாம், இது மொத்தம் 55 பக்கங்களை கொண்டதாக உள்ளது" என்றார்.

 கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி

சுமார் ஒரு வாரக் காலம் ஆன்லைன் மூலம் ஏலம் நடைபெறவுள்ள நிலையில், ஏலத் தொகையை கிரிப்டோகரன்சி மூலமாகவும் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு ஹாங்காங்கில், கீ 10138 என்ற வைரம் சுமார் 12.3 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது. இந்த வைரத்திற்கான தொகை கிரிப்டோகரன்சியாகவே செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.5

English summary
World's largest known cut diamond kept on public display for the first time in Dubai.The Enigma, rare black carbanado diamond is believed to have been created when an asteroid hit the Earth more than 2.6 billion years ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X