வக்கார் யூனிஸ் ஆக்ஷன், அக்தர் வேகம், காஷ்மீர் காய்கறி வியாபாரியின் மகன்.. யார் இந்த உம்ரான் மாலிக்?
துபாய்: பந்து வீசும்போது அப்படியே வக்கார் யூனிஸ் போல ஒரு ஆக்ஷன்.. பந்தின் வேகம் சோயிப் அக்தர் போல விருட்டென்று கிளம்பி செல்கிறது.. யார் இந்த இளைஞர் என்று அத்தனை பேரையும் உற்று பார்க்க வைத்துள்ளார் உம்ரான் மாலிக்.
Recommended Video
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இந்த 21 வயது மட்டுமே நிரம்பிய வேகப்பந்துவீச்சாளர் தற்போது ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசக்கூடிய இந்திய பந்து வீச்சாளர்கள் மிக மிக அபூர்வம். அப்படியே வீசினாலும் எப்போதோ ஒருமுறை அந்த வேகத்தை காட்ட முடியுமே தவிர தொடர்ந்து சராசரியாக அதே வேகத்தில் அவர்கள் வீசுவதில்லை.

புதிய சாதனை
145 கிலோ மீட்டருக்கும் குறைவான வேகம் என்பது தான் இப்போதைய பெரும்பாலான இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் சராசரியாக இருக்கிறது. ஆனால் உம்ரான் மாலிக் அப்படியல்ல . 145 கிலோ மீட்டர் வேகம் என்பது அவருக்கு சாதாரணமாக வருகிறது. அவ்வப்போது 150 கிலோமீட்டர் வேகத்தையும் டச் செய்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான தான் இவர் முதல் முறையாக களம் இறங்கினார் . அந்தப் போட்டியில் 151.03 வேகத்தில் பந்து வீசினார். நடப்பு ஐபிஎல் சீசனில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் இவ்வளவு வேகத்தில் பந்து வீசியது இதுதான் முதல் முறை.

ஆர்சிபிக்கு எதிராக சிறப்பு
பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் போது மிடில் ஓவர்களில் இவரது வேகப்பந்து வீச்சு ரன்களை வெகுவாக கட்டுபடுத்த உதவியது. மேலும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். போட்டி முடிந்த பிறகு ஆர்சிபி கேப்டன் விராட் கோலிக்கு இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது. உம்ரான் மாலிக் ஹைதராபாத் அணியை சேர்ந்தவராக இருக்கலாம், ஆனால் நீங்கள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறீர்கள். அந்த அடிப்படையில் அவர் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் அதிவேகமாக பந்து வீசுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஐபிஎல் போட்டித் தொடர் பல திறமையாளர்களை கண்டறிய உதவியுள்ளது, அதேபோல இவரது திறமையையும் கண்டறிய உதவி செய்துள்ளது . ஆனால் உடல் நிலையை நல்லபடியாக வைத்துக் கொள்வது உள்ளிட்ட விஷயங்களில் அவர் கவனம் செலுத்துவது அவசியம். அப்போதுதான் தொடர்ந்து சிறப்பான வேகப்பந்து வீச்சாளராக இருக்க முடியும், இதுபோன்ற திறமையாளர்களை ஊக்கப்படுத்தி வளர்க்க வேண்டிய கடமை இருக்கிறது என்று தெரிவித்தார்.

ஏபிடி வில்லியர்ஸ்
அதிவேகப் பந்து வீச்சுக்கு எல்லா வகையான கிரிக்கெட்டிலும் மரியாதை இருக்கத்தான் செய்கிறது. அது டெஸ்ட் போட்டி என்று மட்டும் கிடையாது , 20 ஓவர் போட்டிகளில் கூட இதுபோன்று அதிவேகமாக பந்து வீசும்போது அது பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் போவதை பார்ப்பதற்கு அந்தப் பவுலர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம் இருக்கும். தேவ்தத் படிக்கல் பேட்டிங் செய்தபோதும், நிறைய பந்துகள் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போடப்பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றன. படிக்கல் அடிக்க முற்பட்டபோதெல்லாம் அது பேட்டில் படவில்லை. டேல் ஸ்டெயின் போன்ற அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை சிக்சருக்கு பறக்க விட்ட ஏபி டி வில்லியர்ஸ் கூட நேற்று உம்ரான் மாலிக் பந்தில் சிக்ஸர் அல்லது பவுண்டரி அடிக்க முடியவில்லை. அதிக பந்துகளை அவர் சந்திக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருந்த போதிலும், சந்தித்த பந்துகளிலும் எளிதாக அவர் ரன் குவிக்க முடியவில்லை என்பது உண்மை.
தாய்க்கு ஆனந்த கண்ணீர்
இதுகுறித்து உம்ரான் மாலிக் தந்தை அப்துல் மாலிக், ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது.. எனது மகனுக்கு மூன்று வயது முதல் கிரிக்கெட் என்றால் கொள்ளை பிரியம். ஒரு தொழில்முறை கிரிக்கெட்டராக மாற வேண்டும் என்பது அவரது விருப்பம். ஹைதராபாத் அணிக்காக ஆடும் பதினொரு பேர் கொண்ட குழுவில் உம்ரான் மாலிக் பெயர் இடம் பெற்றிருப்பது அறிந்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம் . மாலிக் பந்து வீசுவதை தொலைக்காட்சியில் பார்த்த போது எனது மனைவியின் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. மிகத் தீவிரமாக முயற்சி செய்து பயிற்சி செய்து இந்த நிலைமைக்கு அவர் வந்துள்ளார். கண்டிப்பாக ஒருநாள் இந்திய அணிக்காக விளையாடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

துணை நிலை ஆளுநர் வாழ்த்து
ஜம்மு-காஷ்மீர் மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா ட்விட்டர் மூலமாக உம்ரான் மாலிக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உம்ரான் மாலிக் தந்தை அப்துல்மாலிக் காய்கறி விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அதற்கு மாற்றாக அணிக்குள் கொண்டு வரப்பட்டவர்தான் உம்ரான். வந்ததுமே முதல் போட்டியில் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆனால் நேற்று தனது ஆர்சிபிக்கு எதிராக முதல் முறையாக விக்கெட்டையும் வீழ்த்தினார்.

உமர் மாலிக் கிரிக்கெட் வரலாறு
1999ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி பிறந்த உம்ரான், சையது முஸ்தாக் அலி கோப்பைக்காக 2020-21 சீசனில் ஆடினார். லிஸ்ட் ஏ போட்டிகளில் இவ்வாண்டு பிப்ரவரியில்தான் முதல் முறையாக களம் கண்டார். அதாவது விஜய் ஹசாரே போட்டியில் ஆடினார். சில மாதங்களிலேயே ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பை இவர் பெற்றுள்ளார். உம்ரான் வளர்ச்சி வேகமாக உள்ளது. விராட் கூறியதை போல உடல் நிலையில் கவனம் செலுத்துவது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியம் என்பதை உணர்ந்து தனது திறமையை பட்டை தீட்டினால் மிகப்பெரிய பவுலராக மாறும் சூழ்நிலை மற்றும் வாய்ப்பு அவருக்கு வாய்த்துள்ளது. ஸ்லோ பவுலிங், யார்க்கர் ஆகிய இரண்டும் இவரது பந்து வீச்சில் மிஸ்சாவதை போல தெரிகிறது. அதையும் பயின்றால், எதிர்கொள்ள முடியாத பவுலராக உம்ரான் மாலிக் எழுந்து நிற்பார் என்பது உண்மை.

புது சாதனை
நேற்று ஆர்சிபிக்கு எதிரான போட்டியின்போது, தனது 2வது ஓவரை உம்ரான் மாலிக் வீசியபோது, நான்காவது பந்தை 152.95 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். இது புல்-டாஸாக வீசப்பட்டது. நடப்பு ஐ.பி.எல். 2021 சீசனில் மிகவும் வேகமாக வீசப்பட்ட பந்தாக இது சாதனையை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப் பந்து வீச்சாளர் லூக்கி பெர்குசன் 152.75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதுதான் இந்த ஐபிஎல் சீசனின் சாதனையாக இருந்தது. அதை உம்ரான் மாலிக் முறியடித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications