ஹீலியம் வாயுவை செலுத்தி என்ஜீனியரிங் பெண் தற்கொலை.. ஈரோட்டில் திருமணமான 3 மாதத்தில் சோகம்
ஈரோடு: ஈரோடு அருகே திருமணமான 3 மாதத்தில் என்ஜினீயரிங் பட்டதாரி பெண் ஹீலியம் வாயுவை செலுத்தி கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே பொலவக்காளிப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி திருவேங்கடசாமி- மரகதமணி. இந்த தம்பதிக்கு இந்து என்ற 25 வயது மகள் இருந்தார்.
கம்பூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பட்டதாரியான இந்து, கோவையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததார்.

சென்னையில் பணி
இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்துவுக்கும் நல்லகவுண்ட பாளையத்தை சேர்ந்த விஷ்ணு என்பவருக்கும் திருமணம் நடந்தது. விஷ்ணு சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால் திருமணத்துக்கு பின்னர் இந்துவும் தனது வேலையை சென்னைக்கு மாற்றிக்கொண்டார். அங்கு விஷ்ணுவுடன் சென்னை ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இருவரும் ஒன்றாகவே சென்னையில் வசித்து வந்துள்ளனர்.

பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷ்ணுவிடம் தனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்றும் இதனால் தான் ஊருக்கு சென்று பார்த்துவிட்டு வருவதாகவும் கூறி இந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன் தினம் வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட இந்து சிறிது நேரம் தூங்குவதாக கூறிவிட்டு அவரது அறைக்கு சென்றுள்ளார். ஆனால் இரவு வரை ஆகியும் அவர் அந்த அறையிலிருந்து வெளியே வரவில்லை.

பிணமாக கிடந்த இந்து
இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அறைக்கதவை தட்டி அழைத்துள்ளனர். ஆனால் எவ்வளவு தட்டியும் இந்து சத்தம் கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இந்து தலை முழுவதும் பாலித்தீன் பையால் மூடியபடியும் ஒரு டியூப் மட்டும் அதில் சென்றவாரும் பிணமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இந்துவை பார்த்து கதறி அழுதனர்.

தற்கொலை
இதற்கிடையே சம்பவம் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இந்து வாயில் ஹீலியம் வாயுவை செலுத்தி மிகக்கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. முகம் முழுவதையும் பாலித்தீன் பையால் சுற்றிக்கொண்டு ஒரு ஹீலியம் வாயு செல்வதற்காக ஒரு பைப் மட்டும் உள்ளே செல்லும் வகையில் டேப்பால் சுற்றிக்கொண்டு ஹீலியம் வாயுவை செலுத்தி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதற்காக அவர் ஹீலியம் சிலிண்டரும் வாங்கி வந்துள்ளார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications