ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி.. வேட்பாளராக மேனகா போட்டி! யார் இவர்?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா என்பவர் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிவித்தார். இளங்கலை பட்டப்படிப்பை முடித்த மேனகா மகளிர் பாசறையில் செயல்பட்டு வரும் நிலையில் அவரது முழுவிபரம் வெளியாகி உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் காங்கிரஸ் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். இந்நிலையில் தான் துரதிர்ஷ்டவசமாக திருமகன் ஈவரொ கடந்த 4ம் தேதி காலமானார்.

இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறார். வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டுள்ளார்.

அப்பாவை பார்க்க சென்ற 5 வயது மகள்.. கடையின் இரும்பு கேட் விழுந்து பலியான பரிதாபம்.. சென்னையில் சோகம்அப்பாவை பார்க்க சென்ற 5 வயது மகள்.. கடையின் இரும்பு கேட் விழுந்து பலியான பரிதாபம்.. சென்னையில் சோகம்

நாம் தமிழர் போட்டி

நாம் தமிழர் போட்டி

அதேபோல் விஜயகாந்தின் தேமுதிக சார்பில் ஆனந்த் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். டிடிவி தினகரனின் அமமுக சார்பில் சிவபிரசாந்த் என்பவர் போட்டியிடுகிறார். 29 வயது நிரம்பிய சிவபிரசாந்த் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக உள்ளார். இந்த 2 கட்சிகளும் தனித்து களமிறங்குவதாக தெரிவித்து வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதேபோல் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிடுவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து இருந்தார்.

வேட்பாளராக மேனகா போட்டி

வேட்பாளராக மேனகா போட்டி

மேலும் ஜனவரி 29ம் தேதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படும் என சீமான் கூறியிருந்தார். அதன்படி இன்று ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான வேட்பாளரை சீமான் அறிவித்தார். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக மேனகா என்பவர் போட்டியிடுவதாக சீமான் இன்று அறிவித்தார். இதுபற்றி சீமான் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

எங்களின் பலமே கடும் உழைப்பு

எங்களின் பலமே கடும் உழைப்பு

‛‛ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளராக மேனகா போட்டியிட உள்ளார். மொழிப்பற்று, இனப்பற்று ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர் இவர். அதனால் இந்த வாய்ப்பை தங்கைக்கு வழங்கி உள்ளோம். கடுமையான உழைப்பை தொகுதியில் கொட்டுவோம். எங்களால் முடிந்தது அதுதான். எங்களின் பலம், பலவீனம் நன்றாக தெரியும். பலவீனம் என்பது பணம் இல்லாதது, பலம் என்பது கடும் உழைப்பு. இதனை செய்து மேனகாவை வெல்ல வைப்போம்'' என்றார்.

யார் இந்த மேனகா?

யார் இந்த மேனகா?

இதையடுத்து வேட்பாளர் மேனகா பேசினார். அப்போது அவர், ‛‛நான் இளங்கலை அறிவியல் ஆடை வடிவமைப்பு படித்துள்ளேன். மகளிர் பாசறை துணை செயலாளராக இருந்து வருகிறேன்'' என்றார். மேனகா தற்போது ஈரோடு மாவட்ட மகளிர் பாசறை துணை செயலாளராக செயல்பட்டு வரும் நிலையில் அவர் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை அதிமுக வேட்பாளர் அறிவிப்பு?

நாளை அதிமுக வேட்பாளர் அறிவிப்பு?

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இருதரப்பும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை. தொடர்ந்து ஆலோசனைகள் மட்டுமே நடத்தி வருகிறது. அதிமுக விவகாரம் தொடர்பான பொதுக்குழு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதையடுத்து நாளை இருதரப்பும் வேட்பாளர்களை அறிவிப்பு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் காங்கிரஸ், தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Party Chief Coordinator Seeman today announced that Maneka will contest as the Nam tamilar Katchi, candidate in the Erode East Assembly Constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X