பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு.. ஈரோட்டில் இளைஞர் அதிரடி கைது.. என்ஐஏ சோதனையை தொடர்ந்து நடவடிக்கை
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய நிலையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கூறி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Recommended Video
கர்நாடக தலைநகர் பெங்களூரில் கடந்த மாதம் 24ம் தேதி பெங்களூர் திலக் நகர் பகுதியில் அல்குவைதா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை கைது செய்தனர். இவர் அளித்த தகவலின்பேரில் தமிழகத்தில் சோதனை நடந்தது.
இந்த சோதனையின்போது சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலி ஜூபா என்பவரை பெங்களூர் போலீசார் கைது செய்தனர்.

என்ஐஏ சோதனை
இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் நேற்று முன்தினம் மாலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) போலீசாருடன் வந்து ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். நடத்தினர். இந்த சோதனையின்போது வீட்டில் இருந்த செல்போன், மடிக்கணினி, டைரி, சிம்கார்டு, வங்கி புத்தகம் உள்ளிட்டவை கைப்பற்றப்ப்பட்டது.

ஒருவர் கைது
மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க துவங்கினர். இந்த விசாரணையின்போது அவர்கள் 2 பேரிடமும் பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் கேட்டு பதில் அளிக்கப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில் நேற்று இரவில் ஒருவர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர் ஈரோடு மாணிக்கம்பாளையம் மெயின் ரோட்டில் வசித்து வரும் 28 வயது நிரம்பிய ஆசிப் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது.

உபா சட்டத்தில் வழக்கு
இதில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அவர் மீது ஈரோடு போலீசார் உபா உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்னொவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடரும் சோதனை
கடந்த 25ம் தேதி சேலத்தில் வேலை செய்து வந்த அப்துல் அலி ஜூபா என்பவரை பெங்களூர் போலீசார் கைது செய்த நிலையில் தான் தற்போது ஈரோட்டில் இன்னொருவர் கைது செய்துள்ளார். அதன்படி கடந்த 3 நாட்களில் மட்டும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சேலத்தில் வெளிமாநில தொழிலாளிகள் 5 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications