சபாஷ்! "கல்வி செலவை அரசே ஏற்கும்!" உக்ரைன் போரால் நாடு திரும்பிய மாணவர்கள்.. ஆதரவாக நிற்கும் கேசிஆர்
ஹைதராபாத்: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் படிப்பு தொடர்பாகப் பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இது தொடர்பாக தெலங்கானா அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். 24ஆம் தேதி ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. ரஷ்ய ராணுவத்தைக் கண்டு துளியும் அஞ்சாமல் உக்ரைன் வீரர்கள் துணிச்சலாகப் போராடி வருகின்றனர்,
இந்தப் போர் 20ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதன் காரணமாக உக்ரைன் நாட்டில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக அழிந்து போயுள்ளது என்றே சொல்லலாம்.

உக்ரைன் போர்
இதனால் உக்ரைன் மக்கள் மட்டுமின்றி, அங்குக் கல்வி கற்கச் சென்றிருந்த வெளிநாட்டு மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். போர் தொடங்கிய உடனேயே உக்ரைன் நாட்டிற்கான பயணிகள் விமானச் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் அங்குள்ள மாணவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர், தாயகம் திரும்ப முடியாமல் தவித்தனர். குறிப்பாகப் போர் தொடங்கிய சமயத்தில் மாணவர்கள் உட்பட பல ஆயிரம் மக்கள் அங்கு இருந்தாக தகவல் வெளியானது.

இந்திய மாணவர்கள்
விமானச் சேவை முடக்கப்பட்டதால், அவர்கள் போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகள் வழியாக இந்திய மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இப்படி இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இங்கிருந்து மருத்துவம் படிக்கச் சென்றவர்களே! உக்ரைன் நாட்டில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மருத்துவம் படிக்க ஆகும் செலவு குறைவு என்பதால் இந்திய மாணவர்கள் பலரும் அங்குச் சென்றிருந்தனர்.

எதிர்காலம்
உக்ரைன் நாட்டில் இப்போது நடந்து வரும் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதே தெரியாமல் உள்ளது. இதனால் அங்கிருந்து தாயகம் திரும்பிய இந்திய மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து அந்த மாணவர்கள் இந்தியாவிலேயே தங்கள் மருத்துவ படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதி இருந்தார்.

கேசிஆர் அறிவிப்பு
இந்நிலையில், தாயகம் திரும்பிய இந்திய மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். தெலங்கானாவில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அங்குப் பேசிய அம்மாநில முதல்வர் கேசிஆர், "தெலங்கானா மாநிலத்தில் இருந்து மொத்தம் 740 மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைன் சென்று இருந்தனர். அவர்கள் அனைவரும் உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பி உள்ளனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்
அவர்களுக்கு எப்போதும் தெலங்கானா அரசு துணை நிற்கும். இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவோம். அவர்கள் இங்கேயே தங்கள் கல்வியைத் தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் படிப்பு தொடர்பாகப் பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மத்திய அரசு இது வரை இந்த விவகாரத்தில் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications