ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரவெல்லாம் பிணத்துடன்.. கதறிய இளைஞர்.. வீட்டிலும், வீதியிலும் கிடக்கும் சடலங்கள்.. அதிர்ச்சி..!

கொரோனாவால் இறந்த சடலங்களை அடக்கம் செய்ய முடியாத அவலம் உள்ளது

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தொற்று பாதித்து உயிரிழந்த கொடுமையைவிட சடலங்களை அடக்கம் செய்ய முடியாமல் ஆந்திர மாநிலம் பரிதவித்து வருகிறது.. அந்த அவலங்களின் ஒரு குட்டி தொகுப்புதான் இது..!

பிரகாசம் மாவட்டத்தில் கனிகிரியை சேர்ந்தவர் சுப்பம்மா.. சாய்நகர் காலனியில் இவர் வீடு உள்ளது.. இவருக்கு தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டிலேயே தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டார்.. சிகிச்சையும் பெற்று வந்தார்.

வீட்டிலேயே இருந்ததால், அவருக்கு திடீரென காய்ச்சல் வந்துவிட்டது.. மேலும் கொரோனா அறிகுறிகளும் அவருக்கு இருப்பதால், அவரும் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு உடல்நிலை மோசமாகி சுப்பம்மா உயிரிழந்துவிட்டார். இப்போது சிக்கல் என்னவென்றால், இவர்கள் வீட்டில் அம்மா - மகன் என 2 பேர்தான்.

நாங்க இருக்கோம்.. நம்பிக்கை அளித்த புதின்.. நன்றி தெரிவித்த மோடி.. இரவில் நடைபெற்ற முக்கிய உரையாடல்நாங்க இருக்கோம்.. நம்பிக்கை அளித்த புதின்.. நன்றி தெரிவித்த மோடி.. இரவில் நடைபெற்ற முக்கிய உரையாடல்

சடலம்

சடலம்

இதில், அம்மா இறந்துவிட்டார்.. மகனுக்கும் தொற்று.. வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைமை.. சடலத்தையும் அடக்கம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.. இதனால், கிரிதர் தன்னுடைய சொந்தக்காரர்கள், அதிகாரிகளுக்கு, அம்மாவின் மரணம் குறித்து தகவல் அளித்து, அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார்.

அதிகாரிகள்

அதிகாரிகள்

ஆனால், விஷயத்தை கேள்விப்பட்டு ஒரு சொந்தக்காரர்களும் வரவில்லை.. எங்கே தங்களுக்கும் தொற்று பரவிவிடுமோ என்று பயந்து யாருமே சாவுக்கு வரவில்லை.. அதேபோல அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.. செவ்வாய்க்கிழமை இரவெல்லாம் சடலத்துடனேயே மகன் போராடி தவிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்...!

டெஸ்ட்

டெஸ்ட்

ஸ்ரீகாகுளம் மாவட்டம், மண்டசா மண்டல் கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா போன்ற அறிகுறிகள் இருந்துள்ளது.. அவருக்கு 50 வயது இருக்கும்.. கொரோனா டெஸ்ட்டும் எடுத்துள்ளார். உடனடியாக ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார்.. ஆனால், டெஸ்ட் ரிப்போர்ட் வருவதற்குள்ளேயே அந்த பெண் திடீரென இறந்துவிட்டார்.

 ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

ஆஸ்பத்திரியில் இறந்துவிட்டாலும், அவரை கொண்டு செல்ல எந்த ஆம்புலன்சும் அங்கு இல்லை.. மற்ற வாகனங்களும் கிடைக்கவில்லை.. அதனால் கொரோனா பாதித்த சடலத்துடனேயே உறவினர்கள் அங்கேயே காத்திருந்தனர்.. கடைசி வரை ஒரு ஆம்புலன்சும் கிடைக்காததாலும், சடலத்தை அங்கேயே ரொம்ப நேரத்துக்கு வைத்திருக்க முடியாததாலும், பைக்கிலேயே சடலத்தை உட்கார வைத்து, சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.

சிகிச்சை

சிகிச்சை

அதேபோல, இதே ஸ்ரீகாகுளம் நகரை சேர்ந்தவர் அஞ்சலி.. இவருக்கு தொற்று பாதிப்பு இருந்ததால், குடும்பத்தினர் ஒரு பிரபல ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.. ஆனால், முதலில் பணத்தை கட்ட வேண்டும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் சொன்னது.. ஆனால், குடும்பத்தினர், அவசரத்திற்கு அவ்வளவு தொகையை கையோடு எடுத்து வர முடியாது என்பதால், கூகுள் பே அல்லது டெபிட் கார்டு, போன்பே மூலம் பணத்தை கட்டுகிறோம் என்று சொன்னார்கள்.

பணம்

பணம்

ஆனால், ஆஸ்பத்திரியோ, "ஒன்லி கேஷ்" என்று கறாராக சொல்லிவிட்டது.. இதனால், செய்வதறியாது தவித்த, குடும்பத்தினர், கொரோனா பாதித்த அஞ்சலியை ஆஸ்பத்திரிக்கு வெளியே உட்கார வைத்துவிட்டு, பணம் திரட்ட ஆளுக்கு ஒரு பக்கம் ஓடினார்கள்.. ஒருவழியாக 3 மணி நேரம் போராடி, பணத்தை திரட்டி கொண்டு வந்தனர்.. ஆனால், அதற்குள் அஞ்சலி ஆஸ்பத்திரி வாசலில் சடலமாக விழுந்து கிடந்தார்.. இதை பார்த்து அந்த குடும்பமே கதறி புரண்டு அழுதது.. இதைவிட கொடுமை, அந்த சடலத்தை கொண்டு செல்ல எந்த வாகனமும் நிறுத்தவில்லை.. நீண்ட நேரம் சடலத்துடனேயே நடுரோட்டில் அழுதபடி நின்றிருந்தனர்.

வடமாநிலம்

வடமாநிலம்

இதெல்லாம் எதற்காக என்றால், கடந்த வாரம் வரை எங்கோ வடமாநிலங்களில்தான் இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டது என்று செய்திகளை படித்து கொண்டிருந்தோம்.. இப்போது இங்கேயே நம்ம மாநிலத்துக்கு பக்கத்திலேயே இப்படி கொடுமைகள் அரங்கேறி வருகின்றன.. இதன்மூலம், மனித நேயம் செத்து சுண்ணாம்பு ஆகி கொண்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது என்றாலும், நம்மை தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகி இருக்கிறோம் என்பதை உணர வேண்டும்..!

English summary
Coronavirus in Andhra Pradesh and son took mothers body on bike for cremation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X