ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ப்ளீஸ் கதவை திறங்க".. தம்பதியை அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் பூட்டிவைத்து அட்டகாசம்.. கொடூரர்கள்!

தெலுங்கானாவில் கொரோனா பாதித்த தம்பதியை பூட்டி வைத்துள்ளனர்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டுக்குள் வைத்து அக்கம்பக்கத்தினர் பூட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இப்படி ஒரு சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

தற்போது கொரோனா தொற்று அதிகமாகி உள்ளது.. கடந்த வருடம் இருந்ததைவிட, தற்போது தொற்று வீரியத்துடன் இருக்கிறது..

2வது அலை ஆபத்தானது என்றும் மன்மடங்கு வேகமாக பரவக்கூடியது என்றும் எச்சரிக்கைகள் வெளியாகி வருகின்றன.

"ஐயோ, மூச்சு திணறுது".. வென்டிலேட்டர் கேட்டு போன் நம்பர் தந்த பெண்.. வாட்ஸ் ஆப்பில் வந்த "அதிர்ச்சி"

பாதிப்பு

பாதிப்பு

அதற்கேற்றபடி, பலரும் இந்த தொற்று பாதிப்ப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.. இதனால் மக்களிடம் ஒருவித பய உணர்வு காணப்படுகிறது.. அதன் விளைவாக பல்வேறு மனிதநேயமற்ற செயல்களும் ஆங்காங்கு நடந்து வருகின்றன.. அப்படி ஒரு சம்பவம்தான் ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்துள்ளது.

தம்பதி

தம்பதி

அது ஒரு அப்பார்ட்மென்ட்.. ஏராளமானோர் குடியிருந்து வருகிறார்கள்.. அதில் ஒரு வீட்டில் இருந்த தம்பதி இருவரும், 10 நாளைக்கு முன்பு கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளனர்.. அதில் இருவருக்குமே தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.. அதனால், தங்களை தாங்களே இருவரும் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்... இந்நிலையில், இவர்களின் மகன் கடந்த திங்கட்கிழமையன்று வெளியே சென்று, பெற்றோருக்கு தேவையான மருந்துகளை வாங்கி வந்துள்ளார்.

சிக்கல்

சிக்கல்

மகன் மருந்து வாங்கிவருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்துவிட்டனர்.. அவர் மருந்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றதுமே, அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டனர்.. இதனால், அதிர்ச்சியடைந்த 3 பேரும், "ப்ளீஸ் கதவை திறந்துவிடுங்க.. இப்படி பூட்டிவிட்டால், மருந்து, தண்ணீர் உட்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்" என்று பலமுறை கெஞ்சினர்..

போலீஸ்

போலீஸ்

ஆனாலும் யாரும் கதவை திறந்துவிடவில்லை. இறுதியில், தம்பதி போலீசுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்கள்.. விரைந்து வந்த போலீசார், பூட்டை அகற்றி அவர்களை விடுவித்தனர்.. அத்துடன், அக்கம்பக்கத்தினர் அனைவரையும் அழைத்து அட்வைஸ் தந்தனர்.. அதுமட்டுமல்ல, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை சட்டவிரோதமாக பூட்டியதற்காக எதிர்வீட்டு பிளாட் ஓனர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

English summary
Coronavirus: Neighbours lock covid 19 infected couple in their house
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X