ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு மேலும் ஒரு மகுடம்...கொரோனா தடுப்பு மருந்து...கோவாக்சின் மனித பரிசோதனை துவங்கியது!!

Google Oneindia Tamil News

ஐதராபாத்: ஒரு வார தாமதத்திற்குப் பின்னர் இன்று ஐதராபாத்தில் இருக்கும் நிசாம் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் கொரோனாவுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பு மருந்து பரிசோதனை அடிப்படையில் இருவருக்கு செலுத்தப்பட்டது.

Recommended Video

    Corona Vaccine உபயோகித்தது எப்படி இருந்தது? தன்னார்வலர் தகவல்

    இதுகுறித்து மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் கூறுகையில், ''இன்று காலை 11.30 மணியளவில் நிசாம் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இரண்டு தன்னார்வலர்களுக்கு பரிசோதனை அடிப்படையில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தான கோவாக்சின் செலுத்தப்பட்டது. இருவரும் நன்றாக உள்ளனர்'' என்றார்.

     COVAXIN trials starts at NIMS in Hyderabad 2 have tested

    டெல்லி ஐசிஎம்ஆர், புனே வைராலாஜி நிறுவனம், ஐதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவை இணைந்து கண்டுபிடித்த மருந்து கோவாக்சின். கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மருந்து பரிசோதனையில் வெற்றி பெற்றால், ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதன் அடிப்படையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே பரிசோதனை அடிப்படையில் இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தது. பரிசோதனைக்கு 350 தன்னார்வலர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

    4 மாதத்தில் ரூ.25,000 கோடி.. தமிழகத்தில் அடுத்தடுத்து குவியும் முதலீடுகள்.. சாதித்த முதல்வர்.. செம!4 மாதத்தில் ரூ.25,000 கோடி.. தமிழகத்தில் அடுத்தடுத்து குவியும் முதலீடுகள்.. சாதித்த முதல்வர்.. செம!

    ஐதராபாத்தில் இருக்கும் நிசாம் மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்பட பரிசோதனைக்கு 12 நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்தன. இன்று காலை முதல் டோஸ், மனித சோதனையின் முதல் கட்டமாக இன்று செலுத்தப்பட்டது. இ-மெயில் மூலம் இந்த பரிசோதனைக்கு ஆர்வமாக இருப்பதாக பலரும் தகவல் அனுப்பி இருந்தனர்.

    நோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆரோக்கியம் ஆகியவை வைத்து தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஐதராபாத் மருத்துவமனை நிறுவனத்தில் மட்டும் 60 பேருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டு இருக்கிறது.

    English summary
    COVAXIN trials starts at NIMS in Hyderabad 2 have tested
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X