ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டாங்கிகளை தாக்கி அழிக்கும்.. ஆந்திராவில் நடந்த ஏவுகணை சோதனை வெற்றி.. கலக்கிய டிஆர்டிஓ!

ராணுவ டாங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை மத்திய அரசின் டிஆர்டிஓ நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ராணுவ டாங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை மத்திய அரசின் டிஆர்டிஓ நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

போரின் போதும் எதிரி நாட்டுடனான சண்டையின் போதும் ராணுவ டாங்கிகளை தகர்ப்பதற்காக மேன் போர்ட்டபிள் ஆன்டி டேங்க் ஏவுகணைகளை பயன்படுத்தப்படுவது வழக்கம். இதை வைத்து நாம் சரியாக குறி வைத்து தாக்க வேண்டும்.

DRDO did a successful Man Portable Anti Tank Guided Missile test in, Andhra Pradesh

அதன்படி இந்த ஏவுகணையை ஏவும் வீரர்கள்தான் தாக்க வேண்டிய புள்ளிகளை குறி வைப்பார்கள். இதில் தானாக குறி வைக்க முடியாது. இதற்கு பதிலாக தானாக குறி வைத்து தாக்கும் மேன் போர்ட்டபிள் ஆன்டி டேங்க் ஏவுகணைகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டு வருகிறது.

டிஆர்டிஓ மூலம் இது உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு ''மேன் போர்ட்டபிள் ஆன்டி டேங்க் கைடட்'' ஏவுகணைகள் என்று பெயர். இது தானாக தாக்க வேண்டிய புள்ளிகளை குறி வைத்து எங்கிருந்து தாக்கினாலும் துல்லியமாக தாக்கி அழிக்க கூடிய சக்தி கொண்டது.

இதை சுருக்கமாக MPATGM என்று அழைப்பார்கள். இது 2.5 கிமீ தூரம் வரை சென்று தாக்கி அழிக்க கூடிய சக்தி கொண்டது ஆகும். இதன் இரண்டு தலைமுறை ஏவுகணைகள் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் இதன் மூன்றாவது தலைமுறை ஏவுகணையை இன்று டிஆர்டிஓ சோதனை செய்தது. ஆந்திராவில் உள்ள குர்நூல் பகுதியில் இது சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றி அடைந்துள்ளது. மிக துல்லியமாக குறிக்கப்பட்ட இடத்தை இந்த ஏவுகணை தாக்கியுள்ளது.

இந்த ஏவுகணையை வைத்து மூன்றாவது முறையாக இப்படி சோதனை செய்துள்ளனர். கடந்த இரண்டு முறை நடந்த சோதனையிலும் MPATGM வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுடன் பிரச்சனை நிலவி வரும் நிலையில் MPATGM சோதனை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

English summary
DRDO did a successful Man Portable Anti Tank Guided Missile test in Kurnool, Andhra Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X