ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருப்பதி தேவஸ்தானத்தில் இப்படி ஒரு நிலைமை.. அதுவும் 2 மாதத்துக்கு.. பக்தர்களுக்கு வந்த புது சிக்கல்

அலிபிரி பாதை 2 மாசத்துக்கு மூடப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: திருப்பதி அலிபிரியில் உள்ள திருமலைக்கு செல்லும் நடைபாதை 2 மாசத்துக்கு மூடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு புது சிக்கல் எழுந்துள்ளது.

திருப்பதி பெருமாளை தரிசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வருகிறார்கள்.. இதன்மூலம் கோடிக்கணக்கான காணிக்கை வசூலாகி வந்தது..

ஆனால், கடந்த வருடம் தொற்று பரவிவரவும், 3 மாதத்திற்கு பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது... அதன்பிறகு மெல்ல மெல்ல தொற்று பாதிப்பு குறைந்ததும், மீண்டும் தரிசனம் ஆரம்பமானது.

கொரோனா லேகியத்தில் தீங்கு பொருள் ஏதுமில்லை.. ஆயுஷ் தகவல்.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவு! கொரோனா லேகியத்தில் தீங்கு பொருள் ஏதுமில்லை.. ஆயுஷ் தகவல்.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவு!

பாதிப்பு

பாதிப்பு

இதையடுத்து, தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் என பலருக்கும் தொற்று பாதித்தது.. அப்போதும் கடுமையான விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தனரே தவிர, தரிசனத்திற்கு தடை விதிக்கவில்லை.. தற்போது 2வது அலை பரவி வருகிறது.. இது முதல் அலையைவிட ரொம்ப மோசமானது.. நாளுக்கு நாள் தொற்றால் பல பேர் நாடு முழுவதும் இறந்துவருகின்றனர்..

 விஐபி தரிசனம்

விஐபி தரிசனம்

எனவே, பல மாநிலங்களில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது.. பொதுபோக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தேவஸ்தானத்துக்கு பக்தர்களால் வந்து போக முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து, பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.. விஐபி தரிசனம் போன்றவை மட்டுமே நடந்து வருவதாக தெரிகிறது.

 நடைபாதை

நடைபாதை

இப்படிப்பட்ட சூழலில்தான், அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் நடைபாதையில் வழித்தடம் மற்றும் மேற்கூரை பழுது பார்க்கும் பணிகள் துரிதமாக ஆரம்பமாகி விடுகின்றன.. இந்த அலிபிரி நடைபாதை வழியாகத்தான் பக்தர்கள் திருமலைக்கு செல்வார்கள்.. அதனால்தான், இந்த வழியில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை மற்றும் வெயிலிலிருந்து பாதுகாக்க மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது.

 செப்பனிடும் பணி

செப்பனிடும் பணி

ஆனால், இந்த மேற்கூரை அமைத்து பல வருஷமாகிவிட்டதாம்.. அந்த கூரை பல இடங்களில் பழுதடைந்தும் உள்ளது.. அதனால் அதை செப்பனிட்டு சீரமைக்கும் வேலையை ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்று நடத்தி உள்ளது.. இதற்கான பணியும் ஒருவருஷமாக நடந்து வருகிறது.. செப்பனிடும் பணி ஒருபக்கம் இருந்தாலும் பக்தர்கள் அந்த வழியாகவே செல்ல அனுமதி தரப்பட்டிருந்தது.

பக்தர்கள்

பக்தர்கள்

ஆனால், தற்போது கோவிட் காரணமாக நடைபாதையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், இப்பணிகளை விரைவாக முடிக்க தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது. எனவே, இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக ஜுன் 1-ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை அலிபிரி நடைபாதை மூடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தேவஸ்தானம்

தேவஸ்தானம்

அதேசமயம், பக்தர்கள் சந்திரகிரி மந்தலில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீவாரி மெட்டு வழித்தடத்தில் இருந்து திருமலைக்கு செல்லலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.. இதற்காகவே, அலிபிரியில் இருந்து ஸ்ரீவாரி மெட்டு வரை இலவச பஸ் சேவையையும் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

English summary
Pedestrian closure in Thirumalai for two months
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X