ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெறும் 5 பைசா தான்.."35 வகை டிஷ்களுடன் தாளி மீல்ஸ்"..ஆந்திர உணவகம் போட்ட அதிரடி ஆஃபர்..கூடிய கூட்டம்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திராவில் உள்ள ஒரு உணவகத்தில் வெறும் 5 பைசாவிற்கு 35 வகையான டிஷ்களுடன் தாளி மீல்ஸ் விற்பனை செய்யப்பட்டது. இதனால், அந்த உணவகத்தில் ஆயிரக்கணக்கான உணவுப்பிரியர்கள் திரண்டனர்.

ஆந்திர மெஸ்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அங்கு கிடைக்கும் அன்லிமிட்டடு மீல்ஸ்தான். அதுவும் காரசாரமாக வழங்கப்படும் இந்த மீல்ஸை விரும்பாதவர்களே இல்லை எனலாம்.

பல உணவுப்பிரியர்கள் தேடிப்போய் சாப்பிடும் இடமாகவும் ஆந்திர மெஸ்கள் இருக்கும். சென்னையில் கூட பல இடங்களில் ஆந்திர மெஸ்கள் காணப்படுகின்றன.

 35 வகையான டிஷ்களுடன்

35 வகையான டிஷ்களுடன்

இந்த நிலையில், ஆந்திராவில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் வெறும் 5 பைசாவுக்கு தாளி மீல்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது உணவு பிரியர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியது. கூட்டு, பொறியல், இனிப்பு வகைகள் என 35 வகையான டிஷ்களுடன் தாளி மீல்ஸ் விற்பனை செய்யப்பட்டதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடி விட்டது. இந்த ரெஸ்ட்ராண்ட் சென்னையில் இருக்கிறது என்று நினைத்துவிட வேண்டாம். ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள ரெஸ்டாரண்ட் அமைந்துள்ளது.

 அலைமோதிய கூட்டம்

அலைமோதிய கூட்டம்

ராஜ்போக் ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் விஜயவாடாவில் அமைந்துள்ள இந்த ரெஸ்டாரண்டில் 5 பைசாவுக்கு தாளி மீல்ஸ் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதியில் விளம்பரம் செய்யப்பட்டது. இதைக் கேள்விப்பட்டதும்தான் தாமதம் ஆயிரக்கணக்கான உணவு பிரியர்கள் ரெஸ்டாரண்டை நோக்கி படையெடுத்தனர். 5 பைசாவுக்கு சுவையான தாளி மீல்ஸ் வழங்கப்படுவது என்று அக்கம்பக்கத்தினர் சொல்ல.. சொல்ல அங்கு கூட்டம் அலை மோதிவிட்டதாம்.

 உணவகத்தின் உரிமையாளர் பேச்சு

உணவகத்தின் உரிமையாளர் பேச்சு

சாதாரணமாக ஒரு இட்லியே 5 ரூபாய்க்கு சாலையோர கடைகளில் கூட விற்பனை செய்யப்படும் நிலையில், 5 பைசாவிற்கு தாளி மீல்ஸ் எப்படி வழங்கப்படுகிறது என்பது குறித்து பலரும் விசாரிக்கவும் செய்தனர். இது தொடர்பாக உணவகத்தின் உரிமையாளர் மோகித் கூறுகையில், "நாங்கள் உணவகத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த யுக்தியை கையாண்டதாக குறிப்பிட்டார். இது தொடர்பாக தொடர்ந்து மோகித் கூறியதாவது:- புதிதாக திறக்கப்பட்ட இந்த உணவகத்தை வாடிக்கையாளர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க விரும்பினோம். மார்க்கெட்டிங் யுக்தியாக இதுபோன்ற ஒரு சலுகையை அறிவித்தோம்.

 5 பைசாவிற்கு தாளி மீல்ஸ்

5 பைசாவிற்கு தாளி மீல்ஸ்

முதல் 50 தாளி மீல்ஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டடன. அதன்பிறகு 5 பைசாவிற்கு தாளி மீல்சை கொடுத்தோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உணவகத்திற்கு வந்துவிட்டனர். இவ்வளவு கூட்டத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 300-400 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், நாங்கள் வெளியிட்ட விளம்பர பதிவு மிகவும் பிரபலம் அடைந்து இருக்கிறது. இந்த சலுகை ஒருநாள் மட்டுமே கொடுக்கப்பட்டது" என்றார்.

 தென் இந்திய வாடிக்கையாளர்களை கவர

தென் இந்திய வாடிக்கையாளர்களை கவர

இந்த உணவகத்தின் இணை உரிமையாளர் தீப்தி என்பவர் கூறுகையில், "இந்த உணவகத்தின் ஒரு தாளி மீல்ஸின் விலை ரூ. 420 ஆகும். நாங்கள் 50 சதவீத ஆஃபரில் வழங்கி வந்தோம். இங்குள்ள வட இந்திய, ராஜஸ்தானிய மக்களை கவரும் வகையில் 50 சதவீத ஆஃபர் கொடுத்தோம். வட இந்திய உணவு டிஷ்களுடன் மீல்ஸ் வழங்கப்பட்டதால், தென் இந்திய வாடிக்கையாளர்கள் வருகை குறைந்துவிட்டது. இதனால், அவர்களை கவருவதற்காக இதுபோன்ற ஒரு ஆஃபரை அறிவித்தோம். எங்கள் உணவகத்தில் எந்த மாதிரியான டிஷ்கள் எல்லாம் வழங்கப்படுகின்றன என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில் தான் 5 பைசாவுக்கு தாளி மீல்ஸ் கொடுத்தோம்" என்றார்.

English summary
A restaurant in Andhra was selling thali meals with 35 varieties of dishes for just 5 paisa. Due to this, thousands of foodies thronged the restaurant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X