Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.250 கோடியில் மகள் திருமண வரவேற்பு! 3 லட்சம் பேருக்கு அழைப்பு! வியக்க வைத்த தெலங்கானா மாஜி எம்பி!

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: தெலங்கானாவில் ரூ.250 கோடி செலவில் பிரமாண்டமான அரங்கில் 3 லட்சம் பேருக்கு அழைப்பு விடுத்து மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வெகுவிமரிசையாக தெலங்கானா முன்னாள் எம்பி நடத்தி அசத்தி அனைவரின் புருவத்தையும் உயர்த்த செய்துள்ளார்.

Recommended Video

    Jagan Mohan அதிரடி! Andhra-வில் Ambedkar Konaseema District | *Politics

    இந்தியாவில் முகூர்த்த தினங்களில் ஏராளமான திருமணங்கள் நடந்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சில திருமணங்கள் மட்டும் ‛டாக் ஆப்தி டவுன்' ஆக மாறுகின்றன. குறிப்பாக சினிமா, அரசியல், தொழிலதிபர்களின் திருமணங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.

    இதுதவிர வித்தியாசமான முறையில் நடத்தப்படும் திருமணங்களும் பத்திரிகைகளில் செய்தியாக வெளியாகி வருகின்றன. குறிப்பாக அதிக செலவில் பிரமாண்டமாக நடத்தப்படும் திருமணங்கள் செய்தித்தாள்களின் முதல் பக்க செய்தியாகின்றன. அந்த வகையில் தான் தற்போது தெலங்கானாவின் கம்மத்தில் மாஜி எம்பி ஒருவர் ரூ.250 கோடி செலவில் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தி உள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:

    மாஜி எம்பி

    மாஜி எம்பி

    தெலங்கானா மாநிலம் முன்னாள் எம்பியாக இருந்தவர் பொங்குலேடி சீனிவாச ரெட்டி. கோடீஸ்வரர். இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். 2014ல் நடந்த தேர்தலில் தெலங்கானா மாநிலம் கம்மம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு தெலங்கானா ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியில் இணைந்தார்.

    இந்தோனேசியாவில் திருமணம்

    இந்தோனேசியாவில் திருமணம்

    இவருக்கு ஸ்வப்னி என்ற மகள் உள்ளார். இவரது திருமணத்தை வெகுவிமரிசையாக நடத்த அவர் திட்டமிட்டார். இதற்கான ஏற்பாட்டை அவர் செய்து வந்தார். இந்நிலையில் ஸ்வப்னியின் திருமணம் கடந்த 12ம் தேதி இந்தோனேசியாவில் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் தான் திருமணத்தின்போது 500 பேரை சிறப்பு விமானத்தில் சீனிவாச ரெட்டி இந்தோனேசியா அழைத்து சென்றார் வியப்பில் ஆழ்த்தினார்.

     திருமண வரவேற்பு

    திருமண வரவேற்பு

    இந்தோனேசியாவில் திருமணம் நடந்ததால் ஏராளமானவர்கள் அதில் பங்கேற்க முடியவில்லை. இதனால் அவர் தனது சொந்த மாவட்டத்தில் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். கம்மம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பிரமாண்டமான ஏற்பாடு செய்யப்பட்டது.

    25 ஏக்கரில் உணவு கூடம்

    25 ஏக்கரில் உணவு கூடம்

    அதாவது 30 ஏக்கரில் பிரமாண்டமாகவும், வியக்க வைக்கும் வகையிலும் நிகழ்ச்சி அரங்கம், 25 ஏக்கரில் உணவுக்கூடம் அமைக்கப்பட்டு இருந்தது. சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் 60,000 கார்கள் நிறுத்தக்கூடிய வகையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது. விழா நடைபெறும் இடத்திற்குச் செல்ல புதிய மேம்பாலங்கள் மற்றும் சாலைகள் அமைக்கப்பட்டன.

    3 லட்சம் பேருக்கு அழைப்பு

    3 லட்சம் பேருக்கு அழைப்பு

    அதன்பிறகு அசைவ உணவுகள், அறுசுவை உணவுடன் உணவு பரிமாறப்பட்டன. இதில் மொத்தம் 3 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதாவது கம்மம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டனர். மேலும் அரசியல்கட்சிகளின் தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தொழில் அதிபர்கள் உள்பட அனைத்து துறை சார்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    ரூ.250 கோடி செலவு

    ரூ.250 கோடி செலவு

    மேலும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு அவரது படம் பொறித்த கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டது. மகளின் திருமண வரவேற்புக்காக சீனிவாச ரெட்டி இப்படி செய்திருப்பது தற்போது டாக் ஆப்தி டவுன் ஆக மாறியுள்ளது. அதோடு மட்டுமின்றி திருமணம் வரவேற்பு நிகழ்ச்சிக்காக சீனிவாச ரெட்டி ரூ.250 கோடி வரை செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பாஜகவுக்கு சமைத்த கலைஞர்

    பாஜகவுக்கு சமைத்த கலைஞர்

    ஐதராபாத்தில் சமீபத்தில் பாஜகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உணவு தயார் செய்து வழங்கிய பிரபல சமையல் கலைஞர் ஜி யாதம்மா தான் இந்த விழாவுக்கும் உணவு தயார் செய்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+