தெலுங்கானா: காங்கிரஸுக்கு கடும் அதிர்ச்சி- மாஜி 'தல' ஓபிசி முகம் பொன்னால லக்ஷ்மையா திடீர் ராஜினாமா!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரான மூத்த தலைவர் பொன்னால லக்ஷ்மையா ( Ponnala Lakshmaiah) கட்சியில் இருந்து விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸில் இருந்து விலகிய பொன்னால லக்ஷ்மையா, ஆளும் பிஆர்எஸ் கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
ஒன்றுபட்ட ஆந்திரா அரசியலில் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பொன்னால லக்ஷ்மையா. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் முகமாக அறியப்பட்டவர். முன்னூறு காப்பு என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பொன்னால லக்ஷ்மையா, 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்தலில் வென்றவர். ஆனால் 2014 முதல் தேர்தல் தோல்விகளை எதிர்கொண்டிருப்பவர். தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட போது அதன் முதல் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகித்தவர் பொன்னால லக்ஷ்மையா.

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி நடைபெறும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் பொன்னால லக்ஷ்மையா. இது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில், காங்கிரஸ் கட்சி இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை புறக்கணிக்கிறது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் 50 பிரதிநிதிகள் டெல்லிக்கு வந்தும் காங்கிரஸ் மேலிடம் சந்திக்க மறுத்துவிட்டது. ஒரு தனிமனிதர் நடத்தும் சர்வே முடிவுகளின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் பிற்படுத்தப்பட்ட சமூகம் புறக்கணிக்கப்படுகிறது என குமுறியுள்ளார்.
தற்போது காங்கிரஸில் இருந்து விலகி இருக்கும் பொன்னால லக்ஷ்மையா, ஆளும் பிஆர்எஸ் கட்சியில் இணையக் கூடும் என தெரிகிறது. ஆளும் பிஆர்எஸ் கட்சிதான் அத்தனை பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளது எனவும் புகழ்ந்திருக்கிறார் பொன்னால லக்ஷ்மையா. இதனிடையே பொன்னால லக்ஷ்மையாவின் சொந்த தொகுதியான ஜனகோன் -க்கு பிஆர்எஸ் கட்சி இன்னமும் வேட்பாளரை அறிவிக்கவும் இல்லை. பிஆர்எஸ் கட்சி மொத்தம் 119 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவ்த்திருந்தது. தற்போது காங்கிரஸில் இருந்து வெளியேறிய பொன்னால லக்ஷ்மையா, ஜனகோன் தொகுதியில் பிஆர்எஸ் வேட்பாளராக போட்டியிடக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications