ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீச்சில் ஒரே ஜாலி.. கல்யாண நாளில் மனைவி தந்த "சர்ப்ரைஸ்".. அலறிய கணவன்.. ஹெலிகாப்டரே வந்துடுச்சு

விசாகப்பட்டினத்தில் திருமண நாளில் காணாமல் போன மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: முதலாமாண்டு திருமண நாளில் மனைவி, கணவனுக்கு தந்த அதிர்ச்சியின் பரபரப்பு விசாகப்பட்டினத்தில் இன்னும் நீங்கவில்லை.

Recommended Video

    கல்யாண நாளில் மனைவி தந்த சர்ப்ரைஸ்.. அலறிய கணவன்..

    ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் ரவி... இவர் ஹைதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சாய்பிரியா என்பவருடன் கடந்த வருடம் ஜூலை 26-ந்தேதி திருமணம் நடந்தது... சாய்பிரியாவுக்கு 22 வயதாகிறது..

    சில நாட்களுக்கு முன்பு சாய்பிரியா, விசாகப்பட்டினத்தில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்திருந்தார்.. இவர்களுக்கு 26-ம்தேதி முதலாமாண்டு திருமண நாள் என்பதால், 25-ம் தேதியே மாமியார் வீட்டிற்கு ரவி சென்றுவிட்டார்.. மறுநாள் திருமண நாளை சிறப்பாக கொண்டாடவும் ரவி பல பிளான்களை வைத்திருந்தார்.. அதன்படி, மனைவி சாய்பிரியாவை அழைத்துக் கொண்டு, வைசாக் பீச்சுக்கு சென்றார்.. 2 பேருமே கடலில் ஜாலியாக குளித்து விளையாடி கொண்டிருந்தனர்..

    இறந்த சுமங்கலிகளுக்கு அமாவாசையில் எப்படி தர்ப்பணம் கொடுப்பது..கணவன் இருப்பவர்கள் தர்ப்பணம் தரலாமா? இறந்த சுமங்கலிகளுக்கு அமாவாசையில் எப்படி தர்ப்பணம் கொடுப்பது..கணவன் இருப்பவர்கள் தர்ப்பணம் தரலாமா?

    பசிக்கிறது

    பசிக்கிறது

    சிறிது நேரம் கழித்து கரைக்கு வந்த பிரியா, "பசிக்கிறது, சாப்பிட ஏதாவது வாங்கி தாருங்கள்" என்று ரவியிடம் கேட்டுள்ளார்.. உடனே ரவியும், சாப்பாடு வாங்கி வருவதற்காக சென்றார்... கடைகளில் கிடைத்த உணவு பொருட்களை, கை நிறைய அள்ளிக் கொண்டு வந்தார்.. ஆனால், பிரியாவை காணவில்லை.. பீச் முழுவதும் தேடினார்... எங்குமே பிரியா இல்லை என்பதால், உடனே வீட்டிற்கு போன் செய்து கேட்டார்.. பிரியா வீட்டிற்கு வரவில்லை என்றார்கள்..

     பீச்சில் காணவில்லை

    பீச்சில் காணவில்லை

    ஒருவேளை குளிப்பதற்காக மறுபடியும் கடலில் இறங்கியிருப்பாரோ, அலையில் சிக்கி விட்டிருப்பாரோ? என்று பயந்து அலறி கொண்டே போலீசுக்கு ஓடினார்.. போலீசாரும், தீயணைப்புத் துறையினருடன் விரைந்து வந்தனர்.. படகுகள் மூலம் சாய் பிரியாவை தேடினர்.. அப்போதும் அவர் கிடைக்கவில்லை.. படகுகள் மூலம் பிரியா சிக்காததால், ஹெலிகாப்டர் வரவழைத்து தேடலாம் என்று முடிவு செய்து, ஹெலிகாப்டரையும் வரவழைத்தனர்.. விடிய விடிய கடலிலும், பீச் பகுதிகளிலும் தேடினர். ஆனால் சாய்பிரியாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

    மெசேஜ்

    மெசேஜ்

    இந்த நேரத்தில், சாய்பிரியாவிடமிருந்து அவரது பெற்றோருக்கு ஒரு வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் வந்தது.. அதை அனுப்பியதே சாய்பிரியாதான்.. அதில், நெல்லூரை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்தேன்.. ஆனால் ரவியுடன் எனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துவிட்டீர்கள்.. அவருடன் வாழ எனக்கு பிடிக்கல.. அதனால் காதலனுடன் பெங்களூருக்கு வந்துவிட்டேன்.. என்னை தேட வேண்டாம் என்று கூறியிருந்தார். இதைக் கேட்டு ரவியும் அவரது குடும்பத்தினர் அதிர்ந்து போய்விட்டனர்..

     ஹெலிகாப்டர் வந்தது

    ஹெலிகாப்டர் வந்தது

    இப்போது பிரச்சனை என்னவென்றால், சாய் பிரியாவை கடலுக்குள் தேடுவதற்காக, படகுகளையும், ஹெலிகாப்டர்களையும் வரவழைத்ததால், ரூ.1 கோடி வரை செலவு ஆகிவிட்டதாம்.. பொய் புகார் தந்ததற்கும், விடிய விடிய கடலில் ஹெலிகாப்டர்கள், படகுகள் மூலம் தேடியதற்கும், நஷ்டஈடு தொகையாக ரூ.1 கோடி தருமாறு அதிகாரிகள், பெண்ணின் பெற்றோருக்கு நோட்டீஸ் வழங்கினர்...

    ஹெலிகாப்டர்

    ஹெலிகாப்டர்

    இந்த நோட்டீஸை கண்டு மிரண்டு போன பெற்றோர், "காணவில்லை என்று போலீசில் புகார் தந்தது நாங்கள் இல்லை.. மருமகன்தான்.. எங்கள் மகள் காதலனுடன் ஓடியது தெரியாமல், மருமகன் இப்படி போலீசில் புகார் தந்துவிட்டார்.. அதனால், புகாருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றனர்.. இன்னும் இந்த விவகாரம் முடியவில்லை.. விசாரணைகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இந்த சம்பவம் விசாகப்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Where did the wife go on the first wedding day and what happened in visakhapatnam விசாகப்பட்டிணத்தில் திருமண நாளில் காணாமல் போன மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X