For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அத்துமீறும் ராணுவம்... பாதுகாக்கும் ஆயுதப் படை சட்டம்.. அலறும் அருணாசல பிரதேசம்...

By Mathi
Google Oneindia Tamil News

இடாநகர்: ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டத்தை நீக்கக் கோரி அருணாசலப் பிரதேசத்தில் போராட்டத்தில் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தால் அருணாசலப் பிரதேசம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இண்டியா ஸ்பெண்ட் இணைய தளம் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜம்மு காஷ்மீர், மணிப்பூரைத் தொடர்ந்து அருணாசாலப் பிரதேசத்திலும் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் சட்டத்துக்கு எதிரான குரல் உரத்து கேட்கத் தொடங்கியுள்ளது...

38 புகார்கள்....

38 புகார்கள்....

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 12-ஐ கலவரப் பகுதியாக அறிவித்து ஆயுதப் படை சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் அமலில் உள்ளது...

கடந்த 1991ஆம் ஆண்டு முதல் இதுவரை அருணாசலப் பிரதேசத்தில் ராணுவத்தினரின் அத்துமீறலுக்கு எதிராக 38 புகார்கள் மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 30 புகார்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இன்னமும் 8 புகார்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது..

பாலியல் தொல்லைகள்..

பாலியல் தொல்லைகள்..

இதனால்தான் ராணுவத்தினர் சட்டத்தை தங்களது கைகளில் எடுத்துக் கொண்டு அத்துமீறுகின்றனர்.. கடந்த 6-ந் தேதியன்று பாபும்பரே மாவட்டத்தில் டெஹ்ஹி என்ற விதவையின் வீட்டுக்குள் நுழைந்த 12 ராணுவத்தினர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றனர்... இதேபோல் மற்றொரு திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கின்றனர்.. இதை தட்டிக்கேட்ட அப்பெண்ணின் கணவரை வீட்டில் இருந்து தூக்கி வெளியே வீசி அடாவடித்தனம் செய்துள்ளனர்..

3 ராணுவத்தினர் பலியால்...

3 ராணுவத்தினர் பலியால்...

இதற்கு முன்னர் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டமானது அருணாச்சலப் பிரதேசத்தில் 3 மாவட்டங்களில் அதாவது அஸ்ஸாம் மாநிலம், மியான்மர் நாட்டின் எல்லையை ஒட்டிய மாவட்டங்களில்தான் அமலில் இருந்தது.

கடந்த ஏப்ரல் 4-ந் தேதியன்று நாகா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 ராணுவத்தினர் கொல்லப்பட இதர மாவட்டங்களிலும் இச்சட்டம் அமலானது.. தற்போது இந்த சிறப்பு சட்டத்துக்கு எதிராக அருணாசலப் பிரதேசத்தில் எதிர்ப்பு குரல்கள் உரத்து ஒலிக்கின்றன..

கண்டுகொள்ளப்படாத புகார்கள்..

கண்டுகொள்ளப்படாத புகார்கள்..

எந்த ஒரு மாநிலத்திலும் ராணுவத்தினருக்கு எதிரான புகார்கள் கொடுக்கப்பட்டாலும் அவை கண்டுகொள்ளப்படுவதில்லை.. ராணுவத்தினர் விசாரணைக்குட்படுத்தப்படுவதும் இல்லை என்ற நிலையே நீடித்து வருகிறது.

ராஜ்யசபாவில் இது தொடர்பான தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில், 2010-12ஆம் ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில்தான் மிக அதிக அளவிலான புகார்கள் ராணுவத்துக்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் 2010ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2012-ல் குறைவாக இருக்கிறது... இதர மாநிலங்களில் இத்தகைய புகார்கள் மிகக் குறைவுதான்..

ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு புள்ளி விவரமோ, 1991ஆம் ஆண்டு ஜூன் 16-ந் தேதி முதல் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி வரை 24 ஆண்டுகளாக ராணுவத்தினருக்கு எதிரான 8 புகார்கள் மீதான விசாரணை நிலுவையில் இருக்கிறது என்கிறது..

பலியான பாதுகாப்பு படையினர்..

பலியான பாதுகாப்பு படையினர்..

இந்தியாவிலேயே சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில்தான் பாதுகாப்புப் படையினர் அதிக எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர்.. இந்த இரு மாநிலங்களில் கடந்த 4 ஆண்டுகளில் 330 பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்

2010-14ஆம் ஆண்டு காலத்தில் மாநிலங்களில் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்ட விவரம்:

சத்தீஸ்கரில் 229, ஜம்மு காஷ்மீரில் 159, ஜார்க்கண்ட்டில் 101, பீகாரில் 46, மகாராஷ்டிராவில் 42, மணிப்பூரில் 38, அஸ்ஸாமில் 30, மேகாலயாவில் 27, அருணாசலப் பிரதேசத்தில் 3, திரிபுராவில் 2 பேர் கொல்லப்ப்பட்டுள்ளனர்.. இருப்பினும் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் அமலில் இல்லை... ஏனெனில் அங்கு சி.ஆர்.பி.எப்., எல்லைப் பாதுகாப்புப் படையினர்தான் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் அருணாசலப் பிரதேசத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள ஆயுதப் படை சட்டமான விலக்கப்படாவிட்டால் எப்போது வேண்டுமானாலும் ஆக்கிரமிக்க காத்திருக்கும் சீனாவுக்கே அது சாதகமான அம்சமாகிவிடும் என்றும் எச்சரிக்கின்றனர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்..

English summary
Ten days after a special law protecting army personnel from prosecution was promulgated in new areas of Arunachal Pradesh, 12 soldiers have been accused of groping and sexually harassing three women in the state’s most populous district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X