அஸ்ஸாம் துயரம்.. பிரம்மபுத்திரா ஆற்றில் 100 பேருடன் சென்ற படகுகள் மோதி விபத்து.. பலர் மாயம்
கவுகாத்தி: அஸ்ஸாமின் ஜோர்ஹாட்டில் பிரம்மபுத்திரா ஆற்றில் இன்று இரண்டு பயணிகள் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார். சுமார் 20 பேர் காணாமல் போயுள்ளனர்.
அஸ்ஸாமில் இன்று மாலை 4 மணியளவில் கவுகாத்தியில் இருந்து 350 கிமீ தொலைவில் உள்ள ஜோர்ஹட்டில் உள்ள நிமதி காட்டில் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் சென்ற இரண்டு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியது.
இதில் ஒரு பெண் உயிரிழந்தார். சுமார் 20 பேர் காணாமல் போயுள்ளனர் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. பயணிகளை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்தார்.

நீரில் மூழ்கினர்
அஸ்ஸாமில் இன்று மாலை 4 மணியளவில் கவுகாத்தியில் இருந்து 350 கிமீ தொலைவில் உள்ள ஜோர்ஹட்டில் உள்ள நிமதி காட்டில் மாநில போக்குவரத்து துறையின் அரசுப் பயணிகள் படகு சுமார் 120 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது . அப்போது மற்ற படகு எதிர் திசையில் சென்று கொண்டிருந்தது. இரு படகுகளும் ஒன்றோடு ஒன்று திடீரென மோதிக்கொண்டன. இதில் ஒரு பெண் உயிரிழந்தார். ஏராளமானோர் படகில் இருந்து தவறி விழுந்தனர். விழுந்த உடன் பலர் போராடி படகை பிடித்துக் கொண்டு கரையேறினார்கள். சுமார் 20 பேர் பேர் தண்ணீரில் மூழ்கினார்கள்.

20 பேர் மாயம்
படகுகளில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களுடன் பயணிகளின் சாமான்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டமாநில பேரிடர் மீட்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை தொடங்கினர். ஒரு குழந்தை உட்பட 42 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் இருந்து பலர் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட ஒரு பெண் இறந்துவிட்டதாக மாலை தாமதமாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மாயமான 20 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மாவட்ட நிர்வாகம்
இந்த சம்பவத்திற்குப் பிறகு, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா என்டிஆர்எப் மற்றும் எஸ்டிஆர்எப் உதவியுடன் மீட்புப் பணியை விரைவாக மேற்கொள்ளுமாறு மஜூலி மற்றும் ஜோர்ஹட் மாவட்டங்களின் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணி வேகமாக நடந்து வருகிறது. மாயமானவர்கள் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று உறவினர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி
இதனிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்க அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார். . பயணிகளை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்தார். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் எனறும் கூறினார்.












Click it and Unblock the Notifications