ஒன்றரை வயது குழந்தையை கொன்று பிளாஸ்டிக் பையில் அடைத்த கொடூரம். சொத்துக்காக கொலை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலாத்: ஒன்றரை வயது சிறுவனை அவரது உறவினர்களே கொலை செய்து பிளாஸ்டிக் பையில் அடைத்து வைத்த கொடூரம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மலாத் பகுதியை சேர்ந்தவர் தர்மேந்திரா கண்டு. இவரது உறவினரான விக்கி என்பவரும் அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பதால் தர்மேந்திரா கண்டுவின் ஒன்றரை வயது மகன் விவான் அடிக்கடி விக்கியின் வீட்டிற்கு சென்று விளையாடுவதாக கூறப்படுகிறது.

 1 year old child body was wrapped in plastic

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை வெகு நேரம் ஆகியும் விவான் வீட்டிற்கு வரவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விக்கியின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அங்கும் வரவில்லை எனக் கூறியதால் தர்மேந்திரா கண்டு பல இடங்களில் தேடி அலைந்துள்ளார். பின்னர் குழந்தை காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த நாய் விக்கியின் வீட்டை நோக்கி ஓடியது. வீட்டின் பின்பகுதிக்கு சென்று பிளாஸ்டிக் பையை பார்த்து குறைத்ததுள்ளது. அங்கு சென்ற போலீசார் அந்த பையை பிரித்து பார்த்தனர். அதில் விவான் பிணமாக மூடி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், தர்மேந்திரா கண்டுவின் தந்தை சந்தீபுக்கு உபியில் சில சொத்துக்கள் உள்ளது. அந்த சொத்து தொடர்பாக விவானின் தாய் சோனிக்கும், விக்கியின் மனைவி இந்துவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்சினை எழுந்துள்ளது. இதனை மனதில் வைத்து விவானை விக்கியின் குடும்பத்தினர் கொலை செய்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
1 year old child body brutally murdered in Uttar Pradesh in Malad
Please Wait while comments are loading...