For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

116 பாரன்ஹீட் வெப்பம்.. வரலாறு காணாத வெயிலால் வாடும் மகாராஷ்டிரா மக்கள்

மகாராஷ்டிர மாநிலத்தின் பிர்ரா நகரில் நேற்று வெப்பநிலை 116 பாரன்ஹீட்டாக இருந்ததால் அம்மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வழக்கத்தை காட்டிலும் இது 7 டிகிரி அதிகம்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் அதிகமாக 116 பாரன்ஹீட் வெப்பநிலை மகாராஷ்டிரத்தில் பதிவாகி உள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று நாட்டின் மற்ற பகுதிகளை விட வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. அம்மாநிலத்தின் பிர்ரா டவுனில் வெப்பநிலையில் 116 பாரன்ஹீட்டாக பதிவாகி இருந்தது.

116 Fahrenheit temperature in Maharastra

இனி வரும் நாட்களில் வெயின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அடுத்த வாரம் முதல் வட மாநிலங்களில் அனல் காற்று வீசும் என்றும் அதிலும் குறிப்பாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம், தெற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அனல் காற்று அதிகமாக இருக்கும் என்றும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் குறைந்தபட்சம் 100 பாரன்ஹீட்டாக வெப்பநிலை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

English summary
Hot increases in India's northern states. In Maharastra, 116 Fahrenheit registered yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X