பசுவை கடத்தியதாக சந்தேகம்.. முஸ்லிம் வாலிபரை கொன்று விபத்து போல மாற்ற முயன்ற பசு குண்டர்கள் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஜஸ்ஸதானில், பசு மாட்டை கடத்திச் சென்றதாக கூறி இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள் இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டத்தில் உமர் முகமது என்பவர் தலை துண்டிக்கப்பட்டு ரயில்வே தண்டவாளம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், விசாரணையில் அவர் பசுவை கடத்திச் சென்றதாக சந்தேகத்தின்பேரில் கொலை செய்தது தெரியவந்தது.

2 arrested for killing Muslim man for cow

இதையடுத்து ராம்வீர் குஜ்ஜார் மற்றும் பக்வான் சிங் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனனர். 30களின் வயதுடைய இருவருமே தாங்கள்தான், உமர் முகமதுவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

ரயிலில் அடிபட்டு உமர் இறந்ததை போல காண்பிக்க வேண்டும் என்பதற்காக, தலையை துண்டித்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். தங்களை பசு காவலர்கள் என அழைத்துக்கொண்டுள்ளனர்.

பசுமாடுகளை ஏற்றிச் சென்ற லாரி சென்ற வழியில் ஆணிகளை தூவி அதை பஞ்சர் செய்து கொலை திட்டம் வகுத்ததாக அவர்கள் கூறியுள்ளனர். கைதான இருவர் மீதும் கொலை, கொலை முயற்சி, கலவரம், சாட்சியங்களை கலைத்தல் போன்ற பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே கொலையான நபரும், அவரது நண்பர்கள் சிலரும் பசுவை கடத்துவதை வாடிக்கையாக கொண்டவர்கள் என காவல்துறை கூறியுள்ளது. ஆனால் உமர் குடும்பத்தார்களோ, அவர் பாலுக்காக பசுமாடு வாங்கச் சென்றபோது தவறாக நினைத்து கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The two suspected in the killing of Umar Mohammed, a 35-year-old dairy farmer in Rajasthan who was transporting cows to his home in Pahari tehsil of Alwar district, have confessed to their involvement in the assault and have identified themselves as “gau rakshaks.”

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற