“ஷாக்” ஆன பாஜக.. மோடியின் குஜராத்திலேயே “டஃப்” கொடுத்த காங்கிரஸ்! இது 2017 ரிசல்ட்!
காந்திநகர்: குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச மாநிலங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை சற்று அலசுவோம்.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. குஜராத்தில் ஆளும் பாஜக அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி நிறைவடைகிறது.
இமாச்சல பிரதேசத்தில் 2023 ஜனவரி 8 ஆம் தேதி அரசின் பதவிகாலம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் இன்று 2 மாநிலங்களின் தேர்தல் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.

குஜராத் தேர்தல்
இதில் குஜராத் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் உள்ள மக்களால் அதிகம் உற்று நோக்கப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால்தான்.

பாஜகவுக்கும் முக்கியம்
குஜராத் தேர்தல் களம் என்பது பாஜகவுக்கு மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதை கடந்து பாஜக தலைமை மீது நம்பிக்கையையும், பலத்தையும் நிரூபிக்கும் களமாக பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சற்று அதிர்ச்சியையே அளித்தது.

2017 தேர்தல்
182 இடங்களை கொண்ட குஜராத் சட்டமன்றத்தில், 13 தொகுதிகள் பட்டியலின மக்களுக்காகவும், 27 இடங்கள் பழங்குடியின மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டன. கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவியது. 1,702 ஆண் வேட்பாளர்களும், 126 பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டார்கள்.

வாக்குப்பதிவு
4.35 கோடி வாக்காளர்களை கொண்ட குஜராத்தில் 2.78 கோடி பேர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாக்குகளை பதிவு செய்திருந்தார்கள். 70.49 சதவீதம் ஆண் வாக்காளர்களும், 66.11 சதவீதம் பெண் வாக்காளர்களும் என 68.39 சதவீத வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவாகின.

ஷாக்கான பாஜக
இதில் மத்தியில் ஆளும் பாஜக பிரம்மாண்ட வெற்றிபெறும் என்று பாஜகவினர் மற்றும் பொதுமக்களும் நம்பினார்கள். ஆனால், யாரும் எதிர்பார்க்காத முடிவு அந்த தேர்தலில் கிடைத்தது. குஜராத் சட்டமன்றத்தில் ஏற்கனவே பாஜக வைத்திருந்த பல இடங்களை இழந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. அந்த தேர்தலில் 99 இடங்களில் மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்தது.

ஆச்சரியமளித்த காங்கிரஸ்
அதே நேரம் காங்கிரஸ் கட்சி 177 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி 77 இடங்களில் வெற்றிபெற்று பலரை அச்சரியப்பட செய்தது. பாஜக வசம் இருந்த பல தொகுதிகள் காங்கிரஸ் வசம் சென்றன. 2017 தேர்தலில் வென்று பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தாலும் அது அக்கட்சித் தலைவர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.

இந்த தேர்தல்
பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத் மாநிலத்தில் நெருக்கடி கொடுத்து அதிக தொகுதிகளை வென்ற காங்கிரஸுக்கு அது புதிய உத்வேகத்தை அளித்தது. ஆனால், இம்முறை அர்விந்த் கெஜ்ரிவாலும் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியில் இணைந்து உள்ளதால் முடிவு என்னவாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications