For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கதிகலங்கிய கள்ளக்குறிச்சி! கலவரம் செய்த 3 பேர் கைது! விடாமல் துரத்தும் காவல்துறை! ரெடியான லிஸ்ட்!

Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவி உயிரிழந்த போது நடைபெற்ற கலவரத்தின் போது போலீசாரின் வாகனம் மற்றும் பள்ளியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதாக தற்போது மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் மாடியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதனை அடுத்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பள்ளிக்குள் புகுந்து அங்கு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதோடு பேருந்துகளுக்கும் தீ வைத்தனர்.

மாணவி மரணம்.. மூடப்பட்ட கனியாமூர் பள்ளியை திறப்பதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் உத்தரவு மாணவி மரணம்.. மூடப்பட்ட கனியாமூர் பள்ளியை திறப்பதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி

கள்ளக்குறிச்சி மாணவி

கலவரத்தை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினர் பலரும் இந்த கல்வவீச்சில் காயம் அடைந்த நிலையில் கலவர காட்சிகள் தமிழகம் முழுவதும் வரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. பள்ளி மாணவி ஜூலை மாதம் 13ஆம் தேதி உயிரிழந்த நிலையில் அவரது உடலானது இரண்டு முறை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி பெற்றோர் அவரது உடலை பெற்று சொந்த ஊரில் அடக்கம் செய்தனர்.

செல்போன் விவகாரம்

செல்போன் விவகாரம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் மற்றும் அதை தொடர்ந்த வன்முறை தொடர்பான வழக்குகள் என அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. இந்நிலையில் தற்கொலைக்கு முன்னதாக கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்க தந்தை ராமலிங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கைது

கைது

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவி உயிரிழந்த போது நடைபெற்ற கலவரத்தின் போது போலீசாரின் வாகனம் மற்றும் பள்ளியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதாக தற்போது மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து இதுவரை 400க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

 நடவடிக்கை தொடரும்

நடவடிக்கை தொடரும்

இந்த நிலையில் பள்ளி கலவரத்தின் போது போலீசாரின் வாகனத்தை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த மணிகண்டன் , மதுபாலன் , சரவணன் ஆகிய மூவரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். தொடர்ந்து மூவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார். இதுகுறித்து போலீசார் தரப்பில் பேசியபோது, கைது நடவடிக்கை இன்னும் தொடரும் எனவும், குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளனர்.

English summary
Three more people have now been arrested for allegedly smashing a police vehicle and the school's belongings during the riots that broke out after the death of a girl student at Kaniyamur Shakti Matriculation Higher Secondary School in Kallakurichi district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X