"எனக்கு சளி பிடிச்சிருக்கு".. தன்னந்தனியாக மருத்துவமனைக்கு வந்த 3 வயது சிறுமி.. வைரலாகும் புகைப்படம்
கொஹிமா: பெற்றோர் பணிக்கு சென்றுவிட்டதால் அவர்களை தொல்லை செய்ய விரும்பாத 3 வயது சிறுமி, தனக்கு சளி அறிகுறி இருந்ததை அடுத்து அவராகவே அங்குள்ள சுகாதார நிலையத்திற்கு உடற்சோதனை செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
கொரோனா பரவலின் இரண்டாவது அலை தற்போது சிறியவர்களையும் பாதித்து வருகிறது. இது தொற்று வியாதி என்பதால் நோய் பாதித்தவர்கள் தனியாக சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அந்த வகையில் சுய விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வை உணர்ந்த 3 வயது சிறுமி தற்போது இணையத்தில் டாக் ஆஃப் தி டவுன் ஆகியுள்ளார். வாருங்கள் அவர் என்ன செய்தார் என்பதை பார்ப்போம்.

வெறும் எண்
வயது என்பது வெறும் எண் என நாம் எப்போதும் சொல்வதுண்டு. அதை உண்மை என நிரூபித்தவர் 3 வயது சிறுமி லிபாவி. நாகாலாந்து மாநிலம் ஜுன்ஹிபோட்டோ மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு கடந்த 2ஆம் தேதி இரவு முதல் சளி இருந்து வந்துள்ளது.

சிறுமி
இதையடுத்து அவரது பெற்றோர் நிலத்தில் வேலைக்கு சென்றுவிட்டதால் சிறுமி சமயோஜிதமாக யோசித்து நேராக அந்த கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அங்கு மாஸ்க் போட்டு கொண்டு வந்த சிறுமியிடம் மருத்துவர் விசாரித்தார். தனக்கு சளி இருப்பதை கூறினார்.

தயக்கம்
இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை நாகாலாந்தின் பாஜக இளைஞரணி தலைவர் பெஞ்சமின் யெப்தோமி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் தற்போது பெரியவர்களே கொரோனா தடுப்பூசி போடவும் கொரோனா சோதனை செய்து கொள்ளவும் தயக்கம் காட்டி வரும் நிலையில் சிறிய குழந்தை லிபாவி நமக்கெல்லாம் நல்லதொரு வழியை காட்டியுள்ளார்.

ட்வீட்
பொறுப்புணர்வுதான் தற்போதைய தேவையாகும். அந்த குழந்தை விரைவில் குணமாக வாழ்த்துகள் என தெரிவித்து அந்த புகைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனுக்கும் டேக் செய்துள்ளார். இந்த ட்வீட்டை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். குழந்தையை அவரது பெற்றோர் பொறுப்புணர்வுடன் வளர்த்துள்ளார்கள், சமூகத்தின் நாயகி என்றும் பாராட்டி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications