ஆந்திராவின் காளஹஸ்தியில் லாரி-கார் நேருக்கு நேர் மோதல்... 4 தமிழர்கள் பலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காளஹஸ்த்தி : ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே இன்று பயங்கரமான சாலை விபத்து நடந்துள்ளது. லாரி ஒன்றும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியுள்ளது.

 4 people from Vellore spot dead at Road accident Near Kalahasthi

இந்த மோசமான சாலை விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது விபத்தில் பலியானவர்கள் குறித்த முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது. காரில் பயணித்தவர்கள் வேலூர் மாவட்டம் வாலாஜாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சாமி தரிசனத்திற்காக வந்ததாக தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Car and lorry met with an accident near Kalahasti and 4 died on the spot first level of investigation reveals that they were from Vellore district.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற