For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா தேர்தல்.. 44% பேர் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பர்- கருத்து கணிப்பில் தகவல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலில் 44% பேர் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்போம் என்று கூறியுள்ளதாக கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேடு, லோக்சபா தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்பை நடத்தியது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஐதராபாத், புனே மற்றும் அகமதாபாத் நகரங்களில் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் ஆம் ஆத்மி கட்சியினருக்கு பெரும்பாலான மெட்ரோ நகர மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.

மோடிக்கு 58%

மோடிக்கு 58%

பிரதமர் வேட்பாளர் போட்டியில் நரேந்திர மோடிக்கு அதிக ஆதரவு உள்ளது. அவருக்கு 58% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கேஜ்ரிவாலுக்கு 25%

கேஜ்ரிவாலுக்கு 25%

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமராக 25% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ராகுலுக்கு 14%

ராகுலுக்கு 14%

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்திக்கு 14% பேர்தான் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

ஆம் ஆத்மிக்கு 44% பேர் ஆதரவு

ஆம் ஆத்மிக்கு 44% பேர் ஆதரவு

லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் போட்டியிட்டால் ஆதரிப்பீர்களா? என்ற கேள்விக்கு 44% பேர் ஆம் ஆதரிப்போம் என்று தெரிவித்திருக்கின்றனர்.

23% பேர் ஆதரவு இல்லை

23% பேர் ஆதரவு இல்லை

ஆம் ஆத்மியை ஆதரிக்கமாட்டோம் என்று 23% பேர் தெரிவித்துள்ளனர்.

வேட்பாளரை பொறுத்து 27%

வேட்பாளரை பொறுத்து 27%

27% பேர் வேட்பாளர் யார் என்பதைப் பொறுத்துதான் ஆதரவு என தெரிவித்திருக்கின்றனர்.

தேசிய அரசியலில் ஆம் ஆத்மி

தேசிய அரசியலில் ஆம் ஆத்மி

81% பேர் ஆம் ஆத்மி தேசிய அளவில் வளர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பாஜகவுக்கு பாதிப்பு

பாஜகவுக்கு பாதிப்பு

ஆம் ஆத்மி தேசிய அளவில் வளர்ந்தால் பாஜகவுக்கு பாதிப்பு என 31% பேர் கூறியுள்ளனர்.

காங்கிரசுக்கு பாதிப்பு

காங்கிரசுக்கு பாதிப்பு

ஆம் ஆத்மியால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு என 26% பேர் தெரிவித்திருக்கின்றனர்

இரண்டு கட்சிக்குமே

இரண்டு கட்சிக்குமே

இரண்டு கட்சிகளுக்கும் நிச்சயம் பாதிப்பு என்பது 26% கருத்து

ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை- 5% பேர்

ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை- 5% பேர்

லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று 5 சதவீதம் பேர் தெரிவித்திருக்கின்றனர்.

25 இடங்கள்

25 இடங்கள்

லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மிக்கு 25 இடங்கள் என்பது 25% பேரின் கருத்து

26-50 இடங்கள்

26-50 இடங்கள்

ஆம் ஆத்மிக்கு 26 முதல் 50 இடங்கள் கிடைக்கும் என்பது 26% பேரின் கருத்து

51 முதல் 100 இடங்கள்

51 முதல் 100 இடங்கள்

லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மிக்கு 51 முதல் 100 இடங்கள் வரை கிடைக்கும் என 33% பேர் கூறியுள்ளனர்.

100 தொகுதிகள்

100 தொகுதிகள்

100 தொகுதிகள் அளவுக்கு லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கைப்பற்றும் என 11% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
India's biggest metropolises are eagerly looking forward to the Aam Aadmi Party going national and expect it to make a big splash in the 2014 Lok Sabha elections, but a majority still view Narendra Modi as a better prime ministerial prospect than Arvind Kejriwal with Rahul Gandhi a distant third.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X