For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ம.பி.யில் பகீர்... பாஜக அரசு அலட்சியத்தால் 15 நாட்களில் 51 அரசு ஆசியர்களை பலி கொண்டது கொரோனா!

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசின் அலட்சியத்தால் 15 நாட்களில் 51 ஆசியர்கள், கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக அம்மாநில ஆசியர் சங்கங்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.

புதிய ஹாட்ஸ்பாட்டாக உருவெடுக்கும் கும்பமேளா? 6 நாட்களில் 2,167 பேருக்கு கொரோனா.. திணறும் உத்தரகண்ட்புதிய ஹாட்ஸ்பாட்டாக உருவெடுக்கும் கும்பமேளா? 6 நாட்களில் 2,167 பேருக்கு கொரோனா.. திணறும் உத்தரகண்ட்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்று. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மத்திய பிரதேசத்தில் 9,720 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கட்டுப்பாடுகள் தீவிரம்

கட்டுப்பாடுகள் தீவிரம்

ஆனால் மத்திய பிரதேச பாஜக அரசோ, கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் மாநிலம் முழுவதும் லாக்டவுனை அமல்படுத்த முடியாது. லாக்டவுனை அமல்படுத்துவதற்கு பதிலாக கட்டுப்பாடுகளை தீவிரமாக்குவோம் என்கிறார் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்.

51 ஆசிரியர்கள் பலி

51 ஆசிரியர்கள் பலி

இந்த நிலையில் மத்திய பிரதேச அரசு ஆசிரியர் சங்கம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 15 நாட்களில் மட்டும் 51 அரசு ஆசிரியர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளதாக பட்டியலிட்டுள்ளது. கொரோனாவுக்கு பலியான ஆசிரியர்கள் யார்? யார் என்கிற விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மாவட்ட வாரியாக உயிரிழப்புகள்

மாவட்ட வாரியாக உயிரிழப்புகள்

சிந்த்வாரா மாவட்டத்தில் மட்டும் 28 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர். தார் மாவட்டத்தில் 14 ஆசிரியர்கள், பீடல் மாவட்டத்தில் 6, சிவானி மாவட்டத்தில் 10 பேர் என உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணமே பாரதிய ஜனதா அரசின் அலட்சியம்தான் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு கூடாது

பள்ளிகள் திறப்பு கூடாது

இதனால் ஆசிரியர்க்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும்; பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே இந்த விவகாரத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் மீது கடும் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங்.

English summary
According to the Madhya Pradesh Teachers Congress, 51 Teachers dead for Coronavirus in last 15 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X