ஒடிசாவில் 63 கோழிகள் திடீர் உயிரிழப்பு.. இறப்புக்கான காரணம் தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆகிடுவீங்க!
புவனேஷ்வர்: மனிதர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதை நீங்கள் செய்திகளில் கேட்டு இருப்பீர்கள். பார்த்து இருப்பீர்கள். கோழிகள் மாரடைப்பால் இறந்ததை கேள்விபட்டு இருக்கிறீர்களா? இப்படிபட்ட ஒரு சம்பவம்தான் ஒடிசாவில் நடந்துள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் பரிதா. அதே பகுதியில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராய்லர் கோழிகளை வளர்த்து வருகிறார்.

63 கோழிகள் உயிரிழப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரஞ்சித் பரிதாவின் பண்ணையில் இருந்த 63 பிராய்லர் கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். பக்கத்து வீட்டில் திருமண விழா ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் கடுமையான சத்தத்துடன் இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. இந்த இரைச்சல் காரணமாகத்தான் தனது கோழிகள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக ரஞ்சித் பரிதா குற்றம்சாட்டியுள்ளார்.

இசை சத்தம்
'இது தொடர்பாக அவர் விரிவாக கூறுகையில், '' ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், அருகில் உள்ள மைதாபூர் கிராமத்தைச் சேர்ந்த திருமண குழுவினர் டி.ஜே இசை சத்தமாக ஒலித்துக் கொண்டே எனது கிராமத்திற்கு வந்தனர். மேலும், அதிக சத்தம் ஒலிக்கும் பட்டாசுகளையும் வெடித்தனர். எனது பண்ணையில் உள்ள 2000 பிராய்லர் கோழிகளுக்கு இசை சத்தம் இடையூறாக இருந்ததால் திருமண ஊர்வலத்தில் இருந்தவர்களிடம் ஒலியைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

கால்நடை மருத்துவர் உறுதி
ஆனால் குடிபோதையில் இருந்த சிலர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். அதிக இரைச்சல் காரணமாக பண்ணையில் இருந்த கோழிகள் பயந்து ஓட ஆரம்பித்தன. ஒரு மணி நேரம் கழித்து 63 கோழிகள் பரிதாபமாக இறந்து விட்டன' என்று கூறியுள்ளார். இது பற்றி ரஞ்சித் பரிதா உள்ளூர் கால்நடை மருத்துவரிடம் ஆலோசித்தபோது, பலத்த சத்தத்தால் பறவைகள் அதிர்ச்சியடைந்து, அவை இறந்துவிட்டதாக அவர் கூறியதாக தெரிகிறது.

போலீசில் புகார்
இதனை தொடர்ந்து கோழிகள் இறப்புக்கு காரணமான பக்கத்து வீட்டு ராமச்சந்திர பரிதாவிடம், கோழிப்பண்ணை உரிமையாளர் ரஞ்சித் பரிதா இழப்பீடு கேட்டுள்ளார். ஆனால் ராமச்சந்திர பரிதா இழப்பீடு கொடுக்க மறுத்து விட்டார். '' இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. கோழிகளை கடும் வாகன இரைச்சலுக்கு மத்தியில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் போது, அவைகள் இதுவரை இறக்காத நிலையில் இசை சத்தத்தால் மட்டும் எப்படி கோழிகள் இறக்க முடியும்?'' என்று ராமச்சந்திர பரிதா கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக ரஞ்சித் பரிதா உள்ளூர் போலீசில் ராமச்சந்திர பரிதா மீது புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications