மாப்பிள்ளைக்கு 67 வயசு.. மணப்பெண்ணுக்கு 40 வயசு! முதலிரவில் நடந்த "சம்பவம்!" கோர்ட் வரை போன விவகாரம்
போபால்: முதலிரவு அன்றே இளம் மனைவியை கடித்து வைத்துவிட்டாராம் வயதான கணவர்.. இதுதொடர்பாக அந்த பெண், போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று அந்த தாத்தா மீது புகார் தந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் நடந்து சில நாட்களாகியும் இது தொடர்பான கமெண்ட்களையும் நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவிட்டு கொண்டே இருக்கிறார்கள்.. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்..
முதலிரவில் எத்தனையோ வினோதமான மற்றும் பகீர் சம்பவங்கள் நடந்துள்ளன.. இதற்கு நம் தமிழகத்திலேயே நிறைய உதாரணங்கள் உள்ளன.
கிடைத்தது 4 வாரம் ஜாமீன்.. சிறையிலிருந்து ரிலீசாகிறார் ராஜேந்திர பாலாஜி.. உச்சநீதிமன்றம் உத்தரவு
காரைக்குடியில் 2 வருடங்களுக்கு முன்பு ஒரு திருமணம் நடந்தது.. கல்யாணத்துக்கு போட்ட நகைகள் குறித்த தம்பதி இருவரும் பேச ஆரம்பித்துள்ளனர்.. அது விவாதமாகி சண்டையாகி விட்டது..

கணவர்
இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியை பாத்ரூமில் தள்ளிவிட்டு தலைமுடியை வெட்டிவிட்டார்.. வாயில் தூக்க மாத்திரையையும் திணித்துவிட்டார்.. இதற்கு பிறகு கல்யாண பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார்கள். அதேபோல, முதலிரவில் தன்னை ஆபாச வீடியோ எடுத்ததாக இளம்பெண் ஒருவர் கணவன் மீது நாகர்கோவில் மகளிர் ஸ்டேஷனில் பரபரப்பு புகார் அளிக்க போய், அதில் அந்த மாப்பிள்ளையின் குடும்பமே சிக்கிய சம்பவம் நடந்தது..

விருதுநகர்
விருதுநகரில் கடந்த 2019, நவம்பரில் ஒரு திருமணம் தடபுடலாக நடந்தது.. ஆனால், முதலிரவு நடக்கவில்லை.. இப்படியே 6 மாதமாக நடக்காமல் இருந்துள்ளது.. இதை பற்றி பெண் வீட்டார் மருமகன் வீட்டாரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு மாப்பிள்ளை கூறிய பதில் அவர்களை தூக்கி வாரிப்போட்டுள்ளது.. வருஷக்கணக்கில் முதலிரவு நடக்காதவர்கள் இருக்கிறார்கள்.. அதுக்குள்ள என்ன அவசரம்? என் அப்பாவுக்காகத்தான் உன்னை கல்யாணம் செய்தேன்.. வேண்டுமென்றால் அவருடன் ஜாலியா இருந்துக்கோ.. என்னை தொந்தரவு செய்யாதே என்று மிரட்டி உள்ளார்.. இதனால் அந்த பெண் மகளிர் ஸ்டேஷனில் புகார் கொடுப்பது வரை சென்றார்.

தாத்தா
இப்படி எத்தனையா முதலிரவு சம்பவங்கள் நம்மை நிலைகுலைய வைத்தாலும், மத்திய பிரதேசத்தில் நடந்த சம்பவம் 2 நாட்களாக வைரலாகி கொண்டிருக்கிறது... மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் அந்த பெண்.. இரண்டாம் தாரமாக ஒரு தாத்தாவுக்கு வாக்கப்பட்டு விட்டார்... பெண்ணுக்கு 40 வயதாகிறது.. அந்த தாத்தாவுக்கு 67 வயதாகிறது.. இந்த பெண்ணைவிட 27 வயது பெரியவராம்.. குஜராத்தை சேர்ந்தவர்.. பெரிய தொழிலதிபராம்.. நகைத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.. இவரது முதல் மனைவி இறந்துவிட்டார்.. அதனால், கடந்த வருடம் அக்டோபர் 28ம் தேதியன்று இளம்பெண்ணை தாத்தா 2வது கல்யாணம் செய்துள்ளார்..

குஜராத்
அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி பிரிந்துவிட்ட நிலையில், அவருக்கும் இது 2வது திருமணம்.. அதை சொல்லிதான் மறுமணத்திற்கு குடும்பத்தினர் சம்மதிக்க வைத்துள்ளனர். கல்யாணமும் சீரும் சிறப்புமாக முடிந்தது. திருமணத்துக்கு பிறகு குஜராத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்றார் அந்த பெண்.. இவர்களுக்கு முதலிரவும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. அன்றைய தினமே, இளம்பெண்ணின் உடம்பெல்லாம் தாத்தா கடித்து வைத்துவிட்டாராம்.. உடம்பெல்லாம் பற்கள் பதிந்துள்ளன..

போலீஸ் ஸ்டேஷன்
இதனால் அலறி போன அந்த பெண், போலீஸ் ஸ்டேஷன் சென்று, தன்னுடைய கணவர் உடல் முழுவதும் பல்லால் கடித்து வைத்ததாக புகார் கூறியுள்ளார். பிறப்புறுப்பு உட்பட அவரின் உடல் முழுவதும் தனது கணவர் கடித்து வைத்ததால் காயங்கள் அதிகமாக ஏற்பட்டதாகவும் சொல்லி உள்ளார்.. அன்றைய தினம் மட்டுமல்லாமல், ஒவ்வொரு முறை உடலுறவில் ஈடுபடும்போது, கணவர் இப்படியே கொடூரமாக நடந்து கொண்டதாக புகாரில் தெரிவித்திருக்கிறார் இளம்மனைவி.. அதுமட்டுமல்ல, கணவரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு காட்டி உள்ளார்.. உடனே அந்த தாத்தா மனைவியை மிரட்ட ஆரம்பித்துவிட்டாராம்..

விஐபிக்கள்
என்கிட்ட நிறைய பணம் இருக்கு.. நிறைய விஐபிக்களை தெரியும்.. என்னை பற்றி வெளியே சொன்னால் உன் குடும்பத்தையே குளோஸ் செய்துவிடுவதாக மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு பிறகுதான், அந்த கொடுமை தாங்காமல், அங்கிருந்து தப்பி, இந்தூருக்கு வந்து, மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண்.. இந்த புகாரை பார்த்து போலீசாரே சற்று மிரண்டு விட்டனர்.. விசாரணையும் ஆரம்பமானது.. அப்போதுதான் அந்த தாத்தாவுக்கு பற்களே இல்லையாம்.. எல்லாமே கொட்டி போயுள்ளது.. அதனால் பல்செட் பொருத்தியிருக்கிறார்...

தாத்தாவை காணோம்
அந்த பல்செட்டால்தான், மனைவியை கடித்துள்ளார்... இறுதியில் இந்த விவகாரம் தொடர்பாக கோர்ட் வரை சென்றுவிட்டார் இளம் மனைவி.. கணவர் கடித்ததால் ஏற்பட்ட காயங்கள் குறித்த போட்டோக்களை கோர்ட்டில் சமர்ப்பித்தார்.. அந்த போட்டோக்களை பார்த்து நீதிபதியே ஷாக் ஆனார்.. சம்பந்தப்பட்ட தாத்தாவை உடனடியாக கைது செய்யும்படி உத்தரவிட்டார்.. அத்துடன், அவருடைய பல்செட்டை பிடுங்கி கோர்ட்டில் சமர்ப்பிக்கும்படியும் போலீசாருக்கு உத்தரவிட்டார்... ஆனால், தாத்தா கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டார்.. அவரை எங்கேயும் காணோமாம்.. போலீசார் மும்முரமாக தேடி கொண்டிருக்கிறார்கள்..!