For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓகி புயலில் சிக்கிய தமிழக, கேரளா மீனவர்கள் 952 பேர் மகாராஷ்டிராவில் பாதுகாப்பாக கரைசேர்ந்தனர்

ஓகி புயலில் சிக்கிய தமிழக, கேரளா மீனவர்கள் 952 பேர் மகாராஷ்டிராவில் பாதுகாப்பாக கரைசேர்ந்துள்ளனர்.

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: ஓகி புயலில் சிக்கி நடுக் கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் உட்பட 952 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதுகாப்பாக கரை ஒதுங்கினர். அவர்கள் சொந்த ஊர் திரும்பும்வரை உரிய வசதிகள் செய்து தரப்படும் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் கன்னியாகுமரி அருகே உருவெடுத்த ஓகி புயல் அம்மாவட்டத்தையே உருக்குலைத்துவிட்டு போனது. ஓகி புயல் அரபிக் கடல் பக்கம் நகர்ந்தது.

952 fishermen affected by Cyclone Ockhi reach Maharashtra coast safely, says Devendra Fadnavis

இப்புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. அத்துடன் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 1000-க்கும் அதிகமான மீனவர்களின் நிலைமை என்னவானது என்றும் தெரியவில்லை.

இம்மீனவர்களை மீட்டு தரக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனிடையே மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் பகுதியில் 66 படகுகளுடன் 952 மீனவர்கள் கரை ஒதுங்கியுள்ளனர். இதில் 2 படகுகளில் தமிழக மீனவர்கள் இருக்கின்றனர்.

பருவ நிலை சீரமடைந்து மீனவர்கள் சொந்த ஊர் திரும்பும்வரை அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மீனவர்களின் பாதுகாப்புக்கு உதவியதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

English summary
Fishermen from Kerala and Tamilnadu who were caught in Cyclone Ockhi have reached Maharashtra's Sindhudurg coast and are safe, Chief Minister Devendra Fadnavis said in Mumbai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X