மஹாராஷ்டிராவில் 2 திருடர்களை தனியாளாக பிடித்த 10ம் வகுப்பு மாணவன்.. 1 லட்சம் ரூபாயை மீட்ட ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் பால்கர் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. பிபுல் என்ற 10வது படிக்கும் சிறுவன்தான் இந்த சாகசத்திற்கு சொந்தக்காரன்.

அவன் வீட்டின் நேற்று கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. இவனது, இவனது தாயும் வெளியே சென்ற சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அவர்கள் திரும்பி வந்த போதும் கூட கொள்ளையர்கள் அந்த வீட்டில் திருடும் வேளையில் மும்முரமாக இருந்துளார்கள். மொத்தம் 2 கொள்ளையர்கள் அந்த சிறுவனிடம் அடி வாங்கி இருக்கிறார்கள்.

சண்டை

சண்டை

இவர்கள் வீட்டிற்குள் வந்ததும் அந்த திருடர்கள் இருவரும் இவனை தாக்க வந்துள்ளார்கள். ஆனால் இந்த சிறுவன் தனியாக இரண்டு போரையும் தாக்கி இருக்கிறான். அவர்களிடம் சிறிய ஆயுதங்கள் இருந்துள்ளது. ஆனாலும் இவன் பயப்படாமல் சண்டையிட்டு இருக்கிறான்.

அம்மாவை காப்பாற்றினான்

அம்மாவை காப்பாற்றினான்

இவன் ஒரு திருடனை தாக்கிக் கொண்டு இருக்கும் போதே இன்னொரு திருடன் அவன் அம்மாவை சென்று தாக்கி இருக்கிறான். உடனே பிபுல் அம்மாவை சென்று காப்பற்றி அந்த திருடனுடன் சண்டையிட்டுள்ளான். இது குறித்து அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விடாமல் துரத்தினான்

விடாமல் துரத்தினான்

இந்த சிறுவன் தாக்க தொடங்கிய உடன் உடனே அந்த திருடர்கள் இவனை தள்ளிவிட்டுவிட்டு ஓடி இருக்கிறார்கள். அதற்க்கு அதற்குள் அந்த தெருவில் இருந்த எல்லோரும் வெளியே வந்து இவனுக்கு உதவி இருக்கிறார்கள். பின் இரண்டு திருடர்களும் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்கள்.

1 லட்சம்

1 லட்சம்

அந்த திருடர்களிடம் இருந்து நகை, பணம் மீட்கப்பட்டு இருக்கிறது. இதன் மதிப்பு 1 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. 10ம் வகுப்பு சிறுவன் பிபுல் அந்த தெருவில் இப்போது குட்டி ஹீரோவாகி இருக்கிறான்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 10th std school student named Bipul catches robbers and saved 1 lakh in Mumbai. Police appreciated his brave action.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற