மாதக்கணக்கில் நடந்த கூட்டு வன்புணர்வு.. 6 மாத கர்ப்பமான 9ம் வகுப்பு மாணவி.. ஆந்திராவில் கொடூரம்
அமராவதி: ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் 9ம் வகுப்பு சிறுமியை சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோரை இழந்த சிறுமி ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி பயின்று வந்துள்ள நிலையில், கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 மாத கர்ப்பம்
நாடு முழுவதும் கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் பெண் குழந்தைகளுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்த்தப்பட்டதாக 33,036 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 90 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு இருக்கையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் பதிவாகியுள்ளது. ஆதரவற்றோர் ஆசிரமத்தில் தங்கி பயின்று வந்த 9ம் வகுப்பு பயின்று வந்த 14வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதில் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கூட்டு பாலியல் பலாத்காரம்
இந்நிலையில் கடந்த 10ம் தேதி நடந்த மருத்துவ பரிசோதனையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதனையடுத்து சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் சில சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர் தன்னை கடத்தி ஆசிரமத்திற்கு அருகே உள்ள பாழடைந்த அரசு பள்ளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

வழக்குப்பதிவு
மேலும், ளஇந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது என்றும் சிறுமி வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதன் காரணமாக தற்போது சிறுமி கரப்பமாகியுள்ளார். சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 363, 376 (2) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இதற்கு காரணமான விஜயவாடாவை சேர்ந்த பிரகாஷ் என்பவரை முதற்கட்டமாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவருடன் இருந்த கூட்டாளி யார் என விசாரித்ததில் மற்றொரு அதிர்ச்சி தகவலும் வெளியானது.

கைது
அதாவது, இந்த குற்றத்தில் சிறார் ஒருவரும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மற்றொரு குற்றவாளியான சாய் வேறு ஒரு குற்றத்திற்காக தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications