5 கொடூரர்கள்.. ஆட்டோவில் பயணித்த பெண்ணை கடத்தி.. கூட்டு பாலியல் பலாத்காரம்.. குஜராத்தில் கொடுமை
காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் 31 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் ஏற்கெனவே மனநல சிகிச்சை எடுத்து வந்த நிலையில் தற்போது இந்த கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறது.

ஆட்டோ
குஜராத் மாநிலத்தின் பொடாட் நகரில் 31 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "கடந்த 27ம் தேதி எங்களுக்கு ஒரு புகார் வந்தது. புகாரை விசாரிக்கையில் சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. பாதிக்கப்பட்ட பெண்மணி 26ம் தேதி பொடாட் நகரிலிருந்து கத்தாவுக்கு செல்ல ஆட்டோ ஒன்றை பிடித்துள்ளார்.

சிகிச்சை
கத்தாவில் இவரின் தாயார் இருக்கின்றனர். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி இருந்தாலும், கடந்த சில நாட்களாக மனநலன் பாதிப்புடன் இருந்திருக்கிறார். அவரது குடும்பத்தினர் உதவியுடன் அப்பெண்மணிக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சையை தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்கிறார். இச்சூழலில்தான் அவர் தனது தாய் வீட்டுக்கு பயணப்பட்டுள்ளார். அப்போது, ஆட்டோவில் வேறு சில திடீரென வந்துள்ளனர்.

கூட்டு பாலியல் பலாத்காரம்
இதை எதிர்பாராத அப்பெண்மணி கூச்சலிடுவதற்குள் ஆட்டோ மெயின் ரொட்டிலிருந்து பிரிந்து ஆளரவமற்ற பகுதிக்குள் நுழைந்துள்ளது. பின்னர் அங்கு அப்பெண்ணை ஒருவர் பின் ஒருவராக 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். அப்பெண் கூச்சலிட்டபோது தாக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து கைகால்களை கட்டி, வாயை மூடி வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அடுத்த நாள் மதியம் வரை அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

புகார்
இதனையடுத்து அங்கிருந்து எப்படியோ தப்பித்து வந்த அப்பெண் தனது தந்தையிடம் இது குறித்த விவரித்துள்ளார். ஏற்கெனவே மனநலன் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றிருந்ததாலும், தற்போது கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாலும் அப்பெண்மணி அதீத பதற்றமடைந்துள்ளார். அவரது தந்தை காவல் நிலையத்திற்கு வந்து எங்களிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்." என்று கூறியுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது நிகழ்ந்துள்ள இந்த கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் ஆளும் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications