கல்யாணம் பண்ணிக்கலாமா? மைனர் சகோதரிகளை சீரழித்த சித்தப்பா! ஊரையே உலுக்கிய வழக்கு! அதிர்ந்த போலீஸ்!
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே திருமணம் செய்து கொள்வதாகவும், மேற்படிப்பு படிக்க வைப்பதாக கூறி சகோதரிகளை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இருவரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் பெண்கள், 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
தலைநகரான டெல்லியில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் மிகக் கொடூரமாக உள்ளதுதான் வேதனை. அதற்கு அடுத்தபடியாக ராஜாஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் மைனர் சிறுமிகளுக்கு வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன.

ஜெய்ப்பூரில் அதிர்ச்சி
இந்நிலையில் ஜெய்ப்பூரில் மைனர் சிறுமிகளை இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்பாத்தைச் சேர்ந்த ஒருவரும், அவரது மைத்துனரும், இரண்டு சகோதரிகளை ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தன்பாத்தில் உள்ள ஜாரியா காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமிகள் கடத்தல்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் திருமணம் செய்வதாகவும், மேற்படிப்பு படிக்க வைப்பதாவும் கூறி பாதிக்கப்பட்ட மாணவிகளை ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அர்மான் மற்றும் அவரது மைத்துனரான ஆரிஃப் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையின் போது அர்மான் மைனர் சிறுமிகளின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து கொள்வதாக கூறி இளைய சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தாயார் புகார்
மகள்கள் காணாமல் போனதையடுத்து, எழுத்துப்பூர்வமாக புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார், ஏப்ரல் 7ஆம் தேதியே அர்மான் தனது மகள்களை ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் மூத்த சகோதரியின் கல்விக்கு உதவுவதாகக் கூறி ஏமாற்றியதாகவும் அவர் தெரிவித்தார். பல நாட்களாகியும் மகள்கள் இருவரும் வராததால், ஜாரியா காவல் நிலையத்தில் தாய் புகார் அளித்தார்.

அதிரடி கைது
தேடுதல் தொடங்கியபோது, அர்மான் தனது மைத்துனரின் உதவியுடன் இரு சிறுமிகளையும் ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையில், அர்மானுடன் சிறுமிகள் வசித்து வந்த ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்ற ஆரிப்பை போலீசார் கைது செய்தனர். முன்னதாக இரு சகோதரிகளும் அர்மான் தங்களை ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினர். அர்மானும் அவரது மைத்துனரும் யாரிடமாவது உண்மையை வெளிப்படுத்தினால் கொன்று விடுவதாகவும் மிரட்டியதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications