ரயில்ல போகவே ஆள் இல்லையாம், புல்லட் ரயில் கேக்குதா? ஆர்.டி.ஐ பதிலில் அதிர்ச்சி தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும், குஜராத்தின் அஹமதாபாத்துக்கும் இடையில் 2023க்குள் புல்லட் ரயிலை இயக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஜப்பான் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது.

இதற்கான அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும் 1.10 லட்சம் கோடி இதற்கு செலவு ஆகும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தனி நபர் ஒருவரால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வியில் அகமதாபாத்துக்கும், மும்பைக்கும் இடையில் ஓடும் ரயில்கள் காலியாக செல்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இதன்காரணமாக ரயில்வே துறைக்கு நிறைய நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

 இந்தியாவின் புல்லட் ரயில் திட்டம்

இந்தியாவின் புல்லட் ரயில் திட்டம்

மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும், குஜராத்தின் அஹமதாபத்துக்கும் இடையில் 2023க்குள் புல்லட் ரயிலை இயக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுக்காக ஜப்பான் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும் 1.10 லட்சம் கோடி இதற்கு செலவு ஆகும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். மேலும் இந்த திட்டத்தை அறிவித்த போது ''இது என்னுடைய பல கால கனவு'' என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

 மின்னல் வேகத்தில் செல்லும் புல்லட்

மின்னல் வேகத்தில் செல்லும் புல்லட்

இந்த புல்லட் ரயில் அதிகபட்சமாக 350கிமீ வேகத்தில் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவில் தற்போது வேகமாக செல்லும் ரயிலைவிட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். மேலும் தற்போது அஹமதாபாத் மும்பை இடையிலான 500 கிமீ தூரத்தை ரயிலில் கடக்க 8ல் இருந்து 10 மணி நேரம் ஆகிறது. ஆனால் புல்லட் ரயில் மூலம் 3 மணி நேரத்தில் இந்த தூரத்தை கடக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 750 பயணிகள் செல்லலாம்.

 ஆர்.டி. ஐயில் தகவல்

ஆர்.டி. ஐயில் தகவல்

இந்த நிலையில் இந்திய ரயில்வே துறையிடம் கேள்வி கேட்டு சில நாட்களுக்கு முன் ஆர்.டி,ஐ ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் மும்பை அஹமதாபாத் இடையில் ஓடும் ரயில் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. தற்போது அதில் அதிர்ச்சி அளிக்கக் கூடிய பதில்கள் வெளி வந்து இருக்கிறது. அதன்படி இந்த மார்க்கத்தில் ஓடும் ரயில்கள் அனைத்தும் ஆள் இல்லாமல் நஷ்டமாக ஓடுவதாக கூறப்பட்டுள்ளது.

 தோல்வி அடையும்

தோல்வி அடையும்

மேலும் அந்த பதிலில் ''ஒவ்வொரு வருடமும் 30 கோடி பணம் இதனால் நஷ்டம் ஆவதாகவும். ரயில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக செலவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் பாதி பேர் முன்பதிவு இருக்கையில் செல்வதில்லை'' என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து சாதாரண ரயிலே அங்கு காலியாக செல்வதால் புல்லட் ரயிலில் எப்படி மக்கள் செல்வார்கள் என்று நிறைய பேர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். சிலர் இந்த தகவலில் இருந்து புல்லட் ரயில் திட்டம் தோல்வி அடையும் என்றும் கூறியிருக்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A RTI report says that bullet train scheme wont run successfully in India. It also says that people dont even travel in train these days.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற