கள்ளக்காதல் கொலையில் திடுக்கிடும் திருப்பம்.. அக்காள்-தங்கை அதிரடி கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: உல்லாசமாக இருக்க இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் மனைவியே போட்டுத்தள்ளிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அக்காள் கணவரை கொன்ற வழக்கில் விசாரித்தபோது தனது கணவரையும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை காந்திவிலி, சார்கோப் பகுதியை சேர்ந்த 56 வயதான பெண் ஆஷா. இவரது கணவர் பிராகஷ் வான்கடே, வங்கி அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆஷா தனது கணவரை காணவில்லை என போலீசாரில் புகார் அளித்தார்.

இது தொடர்பான விசாரணை கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் ஆஷா தனது தங்கை வந்தனா மற்றும் அவரது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை விஷம் கொடுத்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தூக்கமாத்திரை கொடுத்து

தூக்கமாத்திரை கொடுத்து

சந்தேக புத்தியால் தொல்லை கொடுத்து வந்த கணவருக்கு 'பாதாம் கீரில்' அதிகளவு தூக்கமாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார் ஆஷா. இதையடுத்து மயக்க நிலைக்கு சென்ற தனது கணவரை தங்கை மற்றும் அவரது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து உடலை பார்னர் பகுதியில் வீசியுள்ளார்.

நாடகமாடிய மனைவி கைது

நாடகமாடிய மனைவி கைது

இதைடுத்து ஆஷாவை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் ஆஷாவின் தங்கை வந்தனா மற்றும் அவரது கள்ளக்காதலன் நிலேசும் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வந்தனாவின் கணவர் அசோக்கும் கடந்த 2012-ம் ஆண்டு முதல் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வந்தனாவும் தனது கணவரை கொலை செய்து நாடகமாடி இருக்கலாம் என சந்தேகித்தனர்.

கள்ளக்காதலுக்கு இடையூறு

கள்ளக்காதலுக்கு இடையூறு

இதையடுத்து போலீசார் வந்தனா மற்றும் அவரது கள்ளக்காதலனிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில், வந்தனாவின் கணவர் அசோக்கும் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. இது குறித்து போலீசாரிடம் வந்தனா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, நிலேசுக்கும், எனக்கும் உடனான கள்ளக்காதலுக்கு கணவர் அசோக் இடையூறாக இருந்தார். இதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை

இதையடுத்து கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி எனது கணவருக்கு அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றி குடிக்க கொடுத்தேன். போதை தலைக்கேறி மயங்கிய நிலையில் இருந்த அவரை, எனது கள்ளக்காதலன் நிலேசுடன் சேர்ந்து கொலை செய்தேன். பின்னர் அவரது உடலை அம்போரா காட்டுப்பகுதியில் இருவரும் கொண்டுபோய் வீசினோம். அடுத்த நாள் கணவரை காணவில்லை என அகமதுநகர் போலீசில் புகார் அளித்தேன்.

ஜாலியாக இருக்கலாம்..

ஜாலியாக இருக்கலாம்..

அதோடு இந்த விவகாரம் முடிந்து கள்ளக்காதலுடன் ஜாலியாக இருக்கலாம் என நினைத்தேன். ஆனால் அக்கா ஆஷாவின் கணவர் பிரகாசை கொலை செய்து, மும்பை போலீசாரிடம் மாட்டி எனது கணவர் கொலை வழக்கிலும் சிக்கிக்கொண்டோம். இவ்வாறு வந்தனா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A younger sister kills husband with her illicit lover in Mumbai. this information came out after her elder sister husband killing case.
Please Wait while comments are loading...