For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதார் வழக்கு.. தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு சட்டம் கொண்டு வர யோசனை?!

ஆதார் விவரத்தை தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஆதார் விவரத்தை தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வருகிறது.

ஆதார் குறித்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரம் கேட்பது சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

[ 100 நாட்களாக செவ்வாயில் வீசும் புயல்.. சிக்கி தவிக்கும் ரோவர்.. கடைசியாக அனுப்பிய போட்டோ! ]

இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது. நாம் ஏற்கனவே அளித்த ஆதார் விவரங்களையும் நீக்கும்படி கூறப்பட்டு இருக்கிறது.

வாங்கினார்கள்

வாங்கினார்கள்

முதலில் ஆதார் அட்டையை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று நடைமுறை இருந்தது. புதிதாக சிம் வாங்க கண்டிப்பாக ஆதார் எண் வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதேபோல் வங்கி கணக்குகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இனி முடியாது

இனி முடியாது

இந்த நிலையில் தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் விவரத்தை மக்கள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. தீர்ப்பின் படி ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு நீக்கப்பட்டது. இதனால் இனி தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரத்தை கோர முடியாது. இதனால் இனி மொபைல் நிறுவனங்கள், சிம் கார்ட் நிறுவனங்கள் என யாரும் ஆதார் விவரங்களை கேட்க முடியாது. கட்டாயம் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்று கோர முடியாது.

திட்டத்தில் இருக்கிறது

திட்டத்தில் இருக்கிறது

இந்த நிலையில் மத்திய அரசு இந்த விஷயத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதரவாக முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இந்த தீர்ப்பு குறித்து பேட்டியளித்த நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி, இந்த விஷயத்தை மத்திய அரசு விவாதிக்கும். மீண்டும் மொபைல் நிறுவனங்களுக்கு ஆதாரை பயன்படுத்த அனுமதி அளிக்க வாய்ப்பு இருந்தால் அந்த நடவடிக்கையை அரசு எடுக்கும். இதன் மூலம் மக்கள் எளிதாக தனியாரிடம் பணிகளை செய்து முடிக்க முடியும் என்று கூறினார்.

என்ன செய்ய வாய்ப்புள்ளது

என்ன செய்ய வாய்ப்புள்ளது

இதனால், மத்திய அரசு தனியாருக்கு ஆதரவாக சட்ட திருத்தம் கொண்டு வர வாய்ப்புள்ளது. அதாவது வங்கிகள், மொபைல் நிறுவனங்கள் ஆதார் அட்டையை கேட்பதில் தவறு கிடையாது என்று அனுமதி அளித்து, சட்டம் கொண்டு வரப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது,

English summary
Aadhaar: BJP Government may bring law support for private companies to use the proof.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X