For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன ஆம் ஆத்மியின் அடுத்த குறி இந்த மாநிலமா! நேரா மோடியின் சாம்ராஜ்ஜியத்தில் கை வைக்கும் கெஜ்ரிவால்

Google Oneindia Tamil News

சூரத்: டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதன் அடுத்த இலக்காக குஜராத் உள்ளது. சொந்த மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சாம்ராஜ்யத்தை உடைக்க ஆம்ஆத்மி வியூகம் வகுத்து வருகிறது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. டெல்லி மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கட்சியை வளர்க்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டு வருகிறார்.

இதனால் கட்சி துவங்கிய 10 ஆண்டுகளில் ஏறக்குறைய இந்தியாவின் பல மாநிலங்களுக்கு அவர் சுற்றுப்பயணம் செய்துள்ளார். மேலும் கோவா, பஞ்சாப், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநில சட்டசபை, பாராளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்களில் ஆம்ஆத்மி கட்சியை களமிறக்கி உள்ளார்.

2 வருட பிளான்! சறுக்கல்களுக்கு இடையே சாதித்த ஆம்ஆத்மி! பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்ததன் சீக்ரெட்! 2 வருட பிளான்! சறுக்கல்களுக்கு இடையே சாதித்த ஆம்ஆத்மி! பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்ததன் சீக்ரெட்!

பஞ்சாப்பில் ஆம்ஆத்மி

பஞ்சாப்பில் ஆம்ஆத்மி

இதனால் படிப்படியாக ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆம்ஆத்மி கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் ஆம்ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெறும் 18 தொகுதிகளிலும், எஸ்ஏடி 3, பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது ஆம்ஆத்மி 72 இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் 59, எஸ்ஏடி 12, பாஜக 1 என தொகுதிகளை இழந்துள்ளன. இதன்மூலம் டெல்லியில் மட்டுமே இருந்த ஆம்ஆத்மி ஆட்சி பஞ்சாப்புக்கும் விரிவடைந்துள்ளது. பஞ்சாப் முதல்வராக ஆம்ஆத்மியின் பகவந்த் மான் முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ளார்.

தேசிய கட்சியாக மாற

தேசிய கட்சியாக மாற

பஞ்சாப்பில் பாரம்பரியமாக ஆட்சி செய்து வந்த காங்கிரஸ், சிரோண்மணி அகாலிதளம் கட்சிகளை வீழ்த்தி இருப்பது ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு புத்துணர்வை கொடுத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கட்சியை இந்தியா முழுவதும் பிரபலமாக்க ஆம்ஆத்மி முடிவு செய்துள்ளது. மேலும் கட்சியில் கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விரைவில் தேசிய கட்சி அந்தஸ்து பெறலாம் என ஆம்ஆத்மி தலைவர்கள் நினைக்கின்றனர்.

அடுத்த குறி குஜராத்

அடுத்த குறி குஜராத்

இதனால் தான் அடுத்த இலக்காக ஆம்ஆத்மி குஜராத்தை நிர்ணயித்துள்ளது. பாஜகவின் கோட்டையாக இருக்கும் குஜராத் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமாகும். 182 தொகுதிகள் உள்ள இந்த மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற வேண்டி ஆம்ஆத்மி தீவிர களப்பணியை முன்னெடுத்துள்ளது. மேலும் குஜராத் சட்டசபையில் இந்த முறை நிச்சயம் கால்பதிக்க ஆம்ஆத்மி முயன்று வருகிறது.

கெஜ்ரிவால் விரைகிறார்

கெஜ்ரிவால் விரைகிறார்

குஜராத் மாநிலத்தில் தேர்தலை சந்திக்க ஆம்ஆத்மி கட்சி வியூகம் வகுத்து வருகிறது. விரைவில் ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வராக பதவியேற்க உள்ள பகவந்த் மான் ஆகியோர் குஜராத் செல்ல உள்ளனர். மேலும் குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் நாளை, மார்ச் 16 ஆகிய 2 நாட்கள் பல்வேறு நகரங்களில் ‛திரங்கா யாத்ரா' என்ற பெயரில் ஊர்வலம் நடத்த உள்ளனர். இதுகுறித்து ஆம்ஆத்மி கட்சியின் டெல்லி எம்எல்ஏவும், குஜராத் பொறுப்பாளருமான குலாப் சிங் ஆமதாபாத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தேர்தல் பணிகள் துவக்கம்

தேர்தல் பணிகள் துவக்கம்

பஞ்சாப் வெற்றியை தொடர்ந்து எனது செல்போனில் தொடர்ந்து ‛ரிங்' அடித்து வருகிறது. பொதுமக்கள் கட்சியில் இணைய தொடர்ச்சியாக ஆர்வம் காட்டி வருகின்றனர். குஜராத் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. நான் இங்கு பல ஆண்டுகளாக பணி செய்து வருகிறேன். வேலைவாய்ப்பின்மை, தேர்வுக்கான கேள்வித்தாள் கசிதல், விவசாயிகள் படும் சிரமம், தனியார் பள்ளிகளில் அதிகரிக்கும் கட்டணம் உள்ளிட்ட பிரச்சனைகளை என்னால் உணர முடிகிறது. இதனால் ஆம்ஆத்மி சார்பில் குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக தான் நாளை, மார்ச் 16ல் ‛திரங்கா யாத்ரா' ஊர்வலம் மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது.

பாஜகவுக்கு கடும் போட்டி

பாஜகவுக்கு கடும் போட்டி

மேலும் ஆம்ஆத்மி கட்சியின் குஜராத் மாநில தலைவர் கோபால் இடாலியா கூறுகையில், ‛‛பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியின் எழுச்சி குஜராத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது. வீடு வீடாகவும், மூலை முடுக்குகளுக்கும் சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட உள்ளோம். குஜராத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு மக்கள் அதிக முறை வாய்ப்பளித்துள்ளனர். இது மாற்றத்துக்கான நேரம். ஆம்ஆத்மிக்கான நேரம். இதனால் இந்த முறை குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி, பாஜக இடையே கடும் போட்டி இருக்கும்'' என்றார்.

Recommended Video

    President Election-ல் பாஜக-வுக்கே சாதகம்..எதிர்க்கட்சிகளின் வியூகம் OUT | Oneindia Tamil
    குஜராத்தில் ஆம்ஆத்மிக்கு அங்கீகாரம்

    குஜராத்தில் ஆம்ஆத்மிக்கு அங்கீகாரம்

    இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சியை வளர்க்க சில ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பலன் கொடுக்காத நிலையில் சமீபத்திய சூரத் நகராட்சி தேர்தலில் 27 கவுன்சிலர்கள் ஆம்ஆத்மி சார்பில் வென்றனர். குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சிக்கு தேர்தல் வாயிலாக கிடைத்த முதல் அங்கீகாரம் இதுவாகும். ஆனால் இதில் 6 பேர் பாஜகவில் இணைந்த நிலையில் சூரத் தொழிலதிபர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி ஆம்ஆத்மி எதிர்க்கட்சியாக உள்ளது. இங்கு 93 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக அதிகாரத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Following Delhi, the Aam Aadmi Party is in power in Punjab. The next target is Gujarat. The Aam Aadmi Party strategy to break Prime Minister Narendra Modi's empire in his home state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X