Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத்தில் ஆம் ஆத்மி 'அக்கவுண்ட்' கூட தொடங்கவில்லை.. "டெபாசிட் கூட மிஞ்சாது" - அமித் ஷா விளாசல்

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: "குஜராத்தில் ஆம் ஆத்மி இன்னும் 'அக்கவுண்ட்' கூட தொடங்கவில்லை.. அதற்குள் அந்தக் கட்சி வெற்றி பெற்றுவிடும் எனக் கூறுவதை எல்லாம் பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது" என பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறினார்.

AAP did not open account in Gujarat yet, says Amit Shah

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்துக்கு நாளை முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு 5-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையேதான் பலப்பரீட்சை இருக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுவரை குஜராத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், இந்த முறை மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.

இந்நிலையில், குஜராத் தேர்தல் நிலவரம், ஆம் ஆத்மியின் வளர்ச்சி, பாஜகவின் வெற்றி வாய்ப்பு ஆகியவை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இன்று பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறிய முக்கிய அம்சங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.

நெறியாளர்: குஜராத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

அமித் ஷா: குஜராத்தை பொறுத்தவரை இது என்றைக்கும் பாஜகவின் கோட்டை தான். இந்த தேர்தலிலும் அது மாறப்போவதில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு, பாஜக ஆட்சியில் குஜராத் கண்ட அபரிமிதமான வளர்ச்சி, எந்த சமூகத்தினரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடாதது ஆகிய அனைத்தும் பாஜகவுக்கு பக்கபலமாக இருக்கிறது. இதனால்தான் 27 ஆண்டுகளாக பாஜகவை குஜராத் மக்கள் அரியணையில் அமர வைத்து வருகின்றனர். இந்த தேர்தலிலும் அது தொடரும்.

நெறியாளர்: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி நுழைந்தது பாஜகவுக்கு பெரும் சவாலாக இருப்பதாக கூறப்படுகிறதே..

அமித் ஷா: இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு எந்தக் கட்சியும் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் போட்டியிட உரிமை உள்ளது. அந்த வகையில், குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. அவ்வளவு தான். மற்றபடி, அது பாஜகவுக்கு சவாலை ஏற்படுத்துகிறது என்பதெல்லாம் யூகத்தின் அடிப்படையில் ஊடகங்கள் வெளியிடும் செய்தி. குஜராத்தில் ஆம் ஆத்மி இன்னும் 'அக்கவுண்ட்' கூட தொடங்கவில்லை. பாஜகவோ குஜராத்தில் ஒரு ஆல விருட்சம் போல வளர்ந்து நிற்கும் கட்சி. அப்படி இருக்கும்போது, குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என சில ஊடகங்கள் கூறுவதை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. இந்த தேர்தலுடன் குஜராத்தில் இருந்து ஆம் ஆத்மி காணாமல் போய்விடும். அக்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள்.

கேள்வி: குஜராத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் இப்போது வலுவிழந்து விட்டதாக சொல்லப்படுகிறதே..

பதில்: இப்போதும் குஜராத்தில் காங்கிரஸ்தான் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அக்கட்சிக்குள் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. அதன் தாக்கம் குஜராத் தேர்தலில் நிச்சயம் இருக்கும். ராகுல் காந்தி பாத யாத்திரை செல்வது அக்கட்சிக்கு பலம் சேர்க்கும் யுக்தி தான். ஆனால், அரசியலை பொறுத்தவைர தொடர்ந்து உழைக்க வேண்டும். இடைவெளி இல்லாமல் உழைக்க வேண்டும். அப்போதுதான் அரசியலில் வெற்றி கிடைக்கும். ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை குஜராத் தேர்தலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கேள்வி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை (பிஎப்ஐ) தடை செய்ததற்கு பின்னால் அரசியல் இருப்பதாக கூறப்படுகிறதே..

பிஎப்ஐ அமைப்பு மேற்கொண்டு வந்த தேசவிரோத நடவடிக்கைகள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்த பிறகே, அந்த அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. குறிப்பாக, இளைஞர்களை தீவிரவாதத்துக்குள் தள்ளும் வேலையை அந்த அமைப்பு செய்து வந்தது. இது தெரியவந்ததன் காரணமாகவே, பல மாநிலங்கள் பிஎப்ஐ அமைப்பை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தன. இதன் தொடர்ச்சியாக, பிஎப்ஐ அமைப்பை நாங்கள் தடை செய்தோம். தேச விரோத செயல்களில் ஈடுபடும் அமைப்பை பாஜக பொறுத்துக் கொண்டு இருக்காது. இதன் ஒருபகுதியாகவே, குஜராத்தில் தீவிரவாதத் தடுப்பு பிரிவு உருவாக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் பாஜக கூறியுள்ளது. குஜராத்தை தொடர்ந்து, பிற மாநிலங்களிலும் இந்த தீவிரவாத தடுப்புப் பிரிவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி: நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலையும், பணவீக்க பிரச்சினையும் குஜராத் தேர்தலில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறதே..

அமித் ஷா: இன்றைக்கு ஒட்டுமொத்த உலகமே பணவீக்க பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், இந்தியா மட்டுமே இந்த பணவீக்கத்தால் குறைந்த அளவு பாதிப்பை சந்திக்கும் நாடாக இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் தற்போது பணவீக்கத்தில் இருந்தும் இந்தியா மீண்டு வருகிறது. குஜராத் மக்களுக்கும் இது நன்கு தெரியும். எனவே, குஜராத் தேர்தலில் பணவீக்க பாதிப்பின் தாக்கம் இருக்காது. இவ்வாறு அமித் ஷா கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+