For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆம் ஆத்மி சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோரின் கவனத்திற்கு...!

Google Oneindia Tamil News

டெல்லி: ஆம் ஆத்மி சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர், தாங்கள் போட்டியிட விரும்பும் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் தலா 100 பேரிடமிருந்து ஆதரவுக் கையெழுத்துப் பெற்று சமர்ப்பித்தால்தான் டிக்கெட்டுக்குப் பரிசீலிக்கப்படுவர் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

இப்படிச் செய்யாமல் யாராவது விண்ணப்பித்தால் அவர்களது பெயர் வேட்பாளர் தேர்வுக்குப் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

AAP raises bar for Lok Sabha ticket aspirants

ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டசபைத் தேர்தலில் 2வது இடத்தைப் பிடித்ததோடு, தற்போது காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சியிலும் அமர்ந்துள்ளது. அடுத்து லோக்சபா தேர்தலிலும் மகத்தான முத்திரையைப் பதிக்க அது ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில் சீட் பெற விரும்புவோருக்கான தகுதிகளை அது நிர்ணயம் செய்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தாங்கள் போட்டியிடும் தொகுதியிலிருந்து 100 பேரிடமிருந்து ஆதரவுக் கையெழுத்தைப் பெற அது ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

தற்போது லோக்சபா தேர்தலில் இந்த தகுதி உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலிருந்தும் தலா 100 பேரின் ஆதரவுக் கையெழுத்தைப் பெற வேண்டும். அப்போதுதான் சீட் தருவது குறித்து அவர்களது பெயர் பரிசீலிக்கப்படும் என்று அது தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு எம்.பி. தொகுதியில் 5 முதல் 6 சட்டசபைத் தொகுதிகள் வரை இருக்கும். அதேசமயம் டெல்லியில், ஒரு லோக்சபா தொகுதிக்கு 10 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. எனவே டெல்லியில் ஏதாவது ஒரு தொகுதியில் யாராவது போட்டியிட விரும்பினால், அவர்கள் குறைந்தது 1000 பேருடைய கையெழுத்துக்களைப் பெற வேண்டியது அவசியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து காஸியாபாத்தில் உள்ள ஆம் ஆத்மி அலுவலக நிர்வாகி ஷாலு கனோஜியா கூறுகையில், இதன் மூலம் தொகுதியில் அந்த வேட்பாளருக்கு போதிய ஆதரவு இருக்கிறதா என்பதை அறிய முடியும். டெல்லி சட்டசபைத் தேர்தலில் இந்த முறையை கேஜ்ரிவால் அறிமுகப்படுத்தினார். அவரே 100 பேரின் ஆதரவுக் கையெழுத்தை சமர்த்தபின்னர்தான் சீட் கேட்டிருந்தார் என்றார்.

English summary
The Aam Aadmi Party has raised the bar for aspiring Lok Sabha candidates. Where it had asked every aspirant to collect 100 signatures of supporters for the assembly elections, now it wants them to get the same number of endorsements from each assembly segment of a Lok Sabha seat. This means, if a constituency has five assembly seats, candidates willing to contest the elections have to get signatures from at least 500 supporters to validate their candidature. Interestingly, each Lok Sabha constituency in Delhi has 10 assembly seats. Hence, candidates must have a backing of at least 1,000 voters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X