For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Livable Planet குறித்துப் பேச ஷில்லாங் போகிறேன்.. கலாமின் கடைசிச் செய்தி

Google Oneindia Tamil News

ஷில்லாங்: இந்தியாவுக்கு இந்த நாள் மிகப் பெரிய இருண்ட நாளாக மாறிப் போயுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவும் சோகமடைந்துள்ளது. அப்துல் கலாம் மறைந்து விட்டார் என்பதை யாராலுமே நம்ப முடியவில்லை. பொய்யாக இந்த செய்தி இருக்கக் கூடாதா என்றே அனைவரும் சோகமுடன் நினைக்கின்றனர். தனது மறைவுக்கு முன்பு வரை சுறுசுறுப்பாக இருந்து விட்டுத்தான் போயுள்ளார் இந்த அருமையான மனிதர்.

தனது மறைவுக்கு 10 மணி நேரத்திற்கு முன்பு அவர் டிவிட்டரில் ஒரு டிவிட் போட்டுள்ளார். அதுவே அவரது கடைசி செய்தியுமாக மாறிப் போயுள்ளது.

Abdul Kalam's last message

தேசத்தின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றவரான அப்துல் கலாம், இன்று மாலை ஷில்லாங் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். Livable Planet என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.

ஆனால் பாதியிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை ஷில்லாங்கில் உள்ள பெத்தானி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை மீட்க டாக்டர்கள் தீவிரமாக முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை.

கடைசி டிவிட்

தனது மறைவுக்கு முன்பு டிவிட்டரில் கலாம் ஒரு டிவிட் போட்டிருந்தார். அதில் ஷில்லாங் போகிறேன். லிவபிள் பிளானட் குறித்து பேசுகிறேன் என்று கூறியிருந்தார் கலாம். துரதிரஷ்டவசமாக அதுவே அவரது கடைசி டிவிட்டாகவும், செய்தியாகவும் மாறிப் போய் விட்டது.

English summary
Dr Abdul Kalam was active well before his death and he had twitted about his visit to Shillong.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X