For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய குடியரசு தினவிழா: சிறப்பு விருந்தினர் ஜப்பான் பிரதமர்

Google Oneindia Tamil News

டெல்லி: வரும் ஞாயிறன்று நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஜப்பான் பிரதமர் அபே கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பின் பேரில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது மனைவியுடன் வருகிற 25 ந்தேதி முதல் 27 ந்தேதி வரை 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

Abe first Japanese PM as Republic Day chief guest

அப்பொது, இந்தியா- ஜப்பானுக்கு இடையே யான வருடாந்திர மாநாட்டில் கலந்து கோண்டு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார் அபே. மேலும், இரு பிரதமர்களின் பேச்சில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்தும், ஒப்பந்தங்கள் குறித்தும் பேசப்பட இருக்கிறது.

இதற்கிடையே, ஜனவரி 26-ந்தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும்படி ஜப்பான் பிரதமருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் இந்திய குடியரசு தினவிழாவில் பெருமை படுத்தப்படும் முதல் ஜப்பான் பிரதமர் என்ற சிறப்பை அபே பெறுகிறார்.

English summary
Prime Minister of Japan Shinzo Abe will pay a three-day official visit to India from January 25 during which he will attend the Republic Day Parade as Chief Guest and hold talks on key issues with his Indian counterpart Manmohan Singh for the bilateral annual summit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X