For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு கதாநாயகியும் மூன்று வில்லன்களும்... பீகார் தேர்தல் சுவாரஸ்யம்

By Mayura Akilan
|

லக்னோ: பீகார் மாநிலத்தில் போஜ்புரி மொழி நடிகை ரீனா ராணியை எதிர்த்து மூன்று ‘வில்லன்கள்'போட்டியிடுவதாக தொகுதிவாசிகள் சுவாரசியமாக பேசி வருகின்றனர்.

தேர்தல் களத்தில் ஹீரோக்களும், வில்லன்களும் மோதுவது சாதரண விசயம்தான்தான். ஆனால் சினிமா ஹீரோயினுக்கு எதிராக நிஜ வில்லன்கள் களத்தில் இறங்கியுள்ளது தொகுதிவாசிகளுக்கு சுவாரஸ்யமாக உள்ளது.

Actress Rina is unfazed as she takes on 'bahubalis' in Bihar

ஆம் ஆத்மி வேட்பாளர்

பீகாரின் மஹராஜ்கன்ச் லோக்சபா தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போஜ்புரி நடிகை ரீனா ராணி (40) போட்டியிடுகிறார்.

மூன்று வில்லன்கள்

இவரை எதிர்த்து ராஷ்ட்ரீய ஜனதா தள எம்பியான பிரபுநாத் சிங் களத்தில் உள்ளார். ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மனோரஞ்சன் சிங் தூமலும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் மைத்துனரான சாது யாதவ் சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

பல வழக்குகள்

இந்த வேட்பாளர்கள் மூவர் மீதும் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியை தாக்கியது உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

ஒரு கதாநாயகியும் மூன்று வில்லன்களும்

எனவேதான் ஒரு கதாநாயகியை எதிர்த்து மூன்று வில்லன்கள் களத்தில் இருக்கின்றனர் என்று தொகுதிவாசிகள் பேசிவருகின்றனர்.

எனக்கு வாய்ப்பு கொடுங்க

இது குறித்து கருத்து கூறியுள்ள ரீனா ராணி, ‘தொகுதிவாசிகள் இப்படி பேசுவது உண்மைதான். இந்த வில்லன்களிடம் இருந்து மக்கள் தப்ப வேண்டுமெனில் கதாநாயகியான எனக்கு அவர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஹீரோயினுக்கே வெற்றி

மே 7ம் தேதி இங்கு தேர்தல் நடைபெறுகிறது. வில்லன்கள் என்னை எதிர்த்து நிற்பதால் நான் கவலைப்படவில்லை. பொதுவாக திரைப்படத்தின் முடிவில் வில்லன்களுக்கு வெற்றி கிடைப்பது இல்லை'. அதேபோல தேர்தலில் எனக்கு வெற்றி நிச்சம் என்றும் அவர் கூறியுள்ளார்.

English summary
Unlike one tormentor usually seen in the movies, Bhojpuri actress and AAP candidate Rina Rani is facing three 'bahubalis' (musclemen) at the poll hustings in Bihar's Maharajganj parliamentary constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X